பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவில்ை வழக்கமாக அமைக்கப்படும் நூலகக் குழு, அடிக்கடி அமைப்பியல், ஆட்சிபற்றி ஆய்வுரை கூறும். நூல் தேர்வு, நிதியினை ஒவ்வொரு துறைக்கும் பிரித்துக் கொடுத்தல் இவ். விரண்டும் இக்குழுவினைக் கலந்தே செய்யப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வழக்கமாகப் பல்கலைக் கழகச் செய்தி ஏட்டையும், ஆராய்ச்கி நூல்களையும் வெளி யிடுகின்றது. - + . பல்கலைக்கழகங்களின் நூலகங்கள், ஏனைய பல்கலைக் கழகங்கள், கலை மன்றங்கள், கழகங்கள் வெளியிடும் மேற். சொன்ன ஏடுகளை விலை ஏதுமின்றிப் பெறுகின்றன. இதே போன்று தாம் வெளியிடுவனவற்றை அவற்றிற்கு விலை ஏதுமின்றித் தருகின்றன. 6Q1 JG/ HTodbñobst (Public Libraries) பொது நூலகம் மக்களின் பல்கலைக்கழகமாகும். நிறம், இனம், சாதி என்ற எந்த வேறுபாடுமின்றி மக்கள் அனை வர்க்கும், விலை ஏதுமின்றி அறிவைத் தரவேண்டும் என்ற கொள்கையை இது கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் பல்வகை விழைவுகளைக் கொண்டுள்ளான். அந்த விழைவுகளைத் துாண்ட, அதன்மூலம் அறிவைக் கொளுத்த, ஏற்ற வழிமுறைகளையும் இயைந்த நெறி வகைகளையும் உண்டாக்குவதே இதன் குறிக்கோள். தென்கிழக்காசிய நாடுகளின் 90% மக்கள், ஏழ்மையோடு, கல்லாமையோடு சிற்றுார்களிலே வாழ்கின்றனர். இவ. ரெல்லாம் அகக் கண்ணற்ருேர். அறிவு நலன் இழந்தோர். இவரிடை-இல்லாமையாலும் கல்லாமையாலும் இழிந்: தோரிடை அறிவின் ஊற்றுக்களாய், வாழ்க்கை வழிகாட்டி களாய், பொது நூலகங்கள் திகழ, அவை முறையோடு அமைக்கப்பெறல் வேண்டும். சமூகம் இதற்காகச் செல.