பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 நம் நாடு தலைமுறை தலைமுறையாக அறியாமையில் மூழ்கிக்கிடக்கிறது. கல்லான்மை என்னும் தளையால் மக்கள் கட்டுண்டுள்ளனர். இத்தகைய மக்கள் கூட்டத்திடை நூல்களின் மதிப்பை உணரவைப்பதும், அவர் தம் உணர்வை நூல்களின் பால் தூண்டி விடுவதும் எளிதான வேலைகளல்ல. சமூக உண்ர்வு, உள நூல், கொள்கை இவற்றின் அடிப்படையில் தொடர்ந்து நாடெங்கும் விளம்பர்ங்கள் செய்யப்படின் தற்போதைய இழிநிலையைத் துடைக்கலாம். செய்தி இதழ்கள், திரைப்படங்கள், வானெலி, அரசினர் விளம்பரத்துறை ஆகியவற்றின் மூலம் பரந்த அளவில் விளம்பரங்கள் செய்யவேண்டும். பொது நூலகங்களை எல்லோருக்கும் பயனுள்ளதாகச் செய்யும் பணிக்குப் பொறுமையும், முறையாகப் பணி செய்தலும் இன்றியமையாதனவாம். இவையிரண்டும் உறுதியாக வெற்றியினை அளிக்கும். இதன் மூலமாக நூலகங்கள எந்த நோக்கங்களுக்காக நிறுவப்பட்டனவோ அந்த நோக்கங்களை மக்கள் நன்கு அறியச்செய்ய முடியும். பொது நூலகங்களின் எல்லா முறைகளும், பணி களும், எதிர் காலத்திற்கான திட்டங்களும் மாநில நூலகக் குழுவினரால் மேற்பார்க்கப்படவேண்டும். இக்குழுவினர் மாநிலக் கல்வித்துறையின் ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் பொதுநூலக இயக்கத்தை நிறுவு வதற்குரிய ஒரு நூலகச் சட்டத்தை நம் மாநிலத்தைப் போன்று எல்லா மாநிலங்களும் நிறைவேற்றவேண்டும். இச்சட்டம், பொது நூலகங்களின் நூல் தேர்வு, தொழில் திறன்நிலை, படிப்போர்க்குரிய தொண்டு ஆகியவற்றை நெறிப்படுத்தவேண்டும்.இந்தத் திட்டத்தின் செலவுகளுள் ஒரு பகுதியைப் பெறுதற்காக ரூபாய்க்கு ஆறு பைசா (மூன்று புதுக்காசுகள்) என்ற விகிதத்தில் வீட்டுவரி