பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கழகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் நூலகங்கள், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிலையம், கல்கத்தா விலுள்ள இந்தியப் புள்ளி விவர ஆய்வு நிலையம் ஆகிய வற்றைச் சேர்ந்த நூலகங்கள் முதலியன சிறப்பு நூலகங் களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவ்வகை நூலகங்களின் தலையாய @ றிக்கோள்களாவன : 1. அந் நூலகம் எத்துறை பற்றியதோ அத்துறை யில் அன்று வரையில் உள்ள அறிவு வளர்க்கும் கருத்துக்களைத் தருதல். 2. அத்துறை பற்றிய நூல்களின் வரலாறுகளையும் விளக்கங்களையும் தொகுத்து வெளியிடல். 3. ஆராய்ச்சி அறிஞருக்கு மொழிபெயர்த்தல், எழுத்துச் சான்றுகள் தருதல், புகைப்படப் படி கள் தருதல் ஆகியவற்றில் துணை புரிதல். 4. அனைத்து நூலகங்களிலும் நூல்கள் பெmம் வாய்ப்புக்களால சிறப்புத் துறைகள் பற்றிய வளர்கின்ற தேவைகளைப் பூர்த்தி செய்தல். 5. பிற நாட்டுச் சிறப்பு நூலகங்களுடன் தொடர்பு கொண்டும், ஒத்துழைத்தும், அந்த நேரம்வரை பிற நாடுகளில் நிகழ்ந்துள்ள கடைசி நிலைகளை யும் அறிந்து தன்னை அடைவோர்க்கு அப்போ தைக்கப்போது அறிவித்தல்.