பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நூலகக்கலை-ஐந்து கொள்கைகள் நூலகம் ஒன்றின் பணிகளை அறிந்து அதனைச் செவ்வனே செய்ய வேண்டுமானல், நூலகத்தின் குறிக் கோள் என்ன என்பதை அறிந்து அதன்படி நடக்க வேண்டும். நூலகம் ஒரு பொது நிலையம் ஆகும். நூல் கள் மக்களிடையே உணர்ச்சியையும் அறிவையும் தூண் டிப் பெருக்குவதுடன் ஆற்றலையும் அளிக்கின்றன. கடந்த காலத்தவரும் இக்காலத்தவருமான சிந்தனையாள ரின் ம்ேலான் எண்ணங்களை, வளமான கருத்துக்கிளைத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும் தருவ்ன நூல்கள். நூலினை மனிதனேடு ஒப்பிடலாம். மனிதனுக்கு அவனது உயிருடன் புறவுடல், அகவுடல் என இரண்டும் உள. நூலில் காணப்படும் சிந்தனையே உயிர். மொழியும் நடையும் அகவுடல்; திாளும் அட்டையும் புறவுடல். எனவே நூலே சிந்தனைக் களஞ்சியம் என்னலாம். மேலும் ஒவ்வொரு நூலினையும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய மின்னற்றல் பொருந்திய மின்கடம் (Cell) என்று சொல்லலாம். இவ்வகை மின்ளுற்றலுடைய மின்கடம் உள்ள மின்சார நிலையமே நூலகம். மின்கட்த் திலிருந்து மின்னற்றல் எழுவதுபோலவே நூல்களி லிருந்து சிந்தனைவளம் பொங்கவேண்டும். அதற்கான நெறிகளில் உய்த்தலும் உதவுதலுமே நூலகப் பணிகள் ஆகும். நூல்களில்ை மக்கள் உள்ளத்திலே சிந்தனை நலன் எழ, எவ்வழியில் பணியாற்ற வேண்டுமென்பதைப்பற்றிக் கூறவந்த நூலகப் பேராசிரியர் டாக்டர் S. R. இரங்கநாதன் தமது நூலில் பின்வரும் நூலகக்கலை பற்றிய ஐந்து