பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விதிகளை அல்லது கொள்கைகளைப் (Five Laws of Library Science) பற்றி விளக்கமாக எழுதி உள்ளார். அக்கொள் கைகளாவன : 1. படிப்பதற்கே நூல்கள். 2. அனைவருக்கும் நூல்கள். 3. படிப்போர் ஏற்காத நூல் ப்யனற்றது. - - 4. படிப்போனின் காலத்தை வீளுக்காதே. 5. நூலகம் வளரும் தன்மையது. - மேலே கண்ட ஐந்து கொள்கைகளும் சிலவற்றின் மதிப்பு:உணர உதவுகின்றன. முதல் கொள்கையின்படி படிப்பதற்கே நூல்கள், நூலகங்களில் உள்ளன என்பது நன்கு புலனுகின்றது. நூலகம் நூல்களைச் சேர்ப்பது, ஒழுங்கு படுத்திய அழகான தோற்றத்திற்காகவோ, பார்ப் போரிடை பெருமூச்சை எழுப்புவதற்கோ அல்ல; மக்கள் படித்தறிந்து பயன் பெறுவதற்கே ஆகும். கிடைக்கா தன என்பதற்காகவோ, விந்தையானவை . .ப் பதம் காகவோ,நூலகத்தார் வீனில் கண்ட நூல்களுக்கெல்லாம் பணம் செலவழித்தல் கூடாது. இத்தகைய நூல்களை வாங்கிப் பாதுகாத்தல் அரசினர் தலைமை நூலகத்தின் பொறுப்பாகும். கண்டதும் படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவனவாக உள்ள நூல்களையே வாங்க வேண்டும். நூலின் அளவு, அச்சு முதலியன கையில் எளிதில் வைத்துப் படிப்பதற்கும், உள்ளத்தைக் கவர்வ தற்கும் ஏற்றவனவாக இருக்கவேண்டும். எனவே நூல கத்தார் இவற்றைப் பார்த்து நூலை வாங்குவதுடன், அதை ஒழுங்காக வைத்திருக்கவும் வேண்டும். கிழிந்தன, சிதைந்தன, பயனற்ற பழமைக் குப்பைகள் முதலிய வற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்திவிட வேண்டும். யாராவது பழையவற்றைப் பார்க்க விரும்பில்ை அரசினர் தலைமை நூலகத்தில் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம்.