பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆால்களை அறிமுகப்படுத்துதல் அறிமுக அலுவலர் கடமை. யாகும். இதன் பொருட்டு அவர், தான் பணி புரியும் நூலகத்தில் என்னென்ன நூல்கள் உள்ளன என்பதை யும், அவை எப்படி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யும், நூல் பட்டியல் முறையையும் அறிந்தவராதல் வேண்டும்! வருவோர்க்கு வேண்டிய செய்திகளை உடனடி யாய்த் தருவதற்குச் சரியானபடி நூல்களை அடுக்கி வைத் திருக்கவேண்டும் என்பதுடன் நூலகப் பட்டியலும் சிறந்த முறையில் தயாரிக்கப் பட்டிருக்கவேண்டும். நூலகத்திற்கு வருவோரை வீணே காத்திருக்கும் படி செய்வதோ, சலிப்பு ஏற்படும் வண்ணம் செய்வதோ ஆகாது. அதாவது நூலகத்திற்கு வருங்கால் மக்களிடம் காணப்படும் விருவிருப்பும் மகிழ்ச்சியும் குறையாதப பார்த்துக்கொள்ள வேண்டும். சுருங்கக் உ -ெ - -- - - - ங் - 1 காலம் சிறிதும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்வது இன்றி யமையாதது. வேண்டாது காலம் போவதைத் தடுப்பது போலவே, வேண்டிய காலத்தையும் குறைக்கவேண்டும், இதற்காகத் தர்ன் விரும்பிய வண்ணம்படிக்கும் முறை (open access System)இன்று பல நூலகங்களில் நடைமுறையிலுள்ளது. இதன் காரணமாகத்தான் நூல்களைக் கண்ணுடி அலமாரி களில் வைத்துப் பூட்டி வைக்காது, திறந்த அலமாரியின் தட்டுக்களில் வைத்து படிப்போர் விருப்பப்படி எடுக்க விடு கின்றனர். சொந்த வீட்டைப்போல் அங்கும் விரும் பியதை எடுத்துப் பார்க்கலாம். அத்துடன் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிப்பதற்கும் இன்று வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும் நூலகச் சீட்டு முறை (Ticket System) வந்த பின்னர், முன்போல எடுத்துச் செல்ல விரும்பும் நூல்களுக்கு விண்ணப்பம் எழுதித்.