பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கணியும், நூல் ஏதும் நுழைக்க முடியாதபடி நெருங்கிய கம்பி அமைப்புகளைக் கொண்டிலங்க வேண்டும் ஒரு சிலர் நூல்களிலிருந்து தாள்களைக் கிழிக்கவும் வேறு வகையான தகாதவற்றைச் செய்யவும் முற்படக் கூடும். எனவே நூலகப் பணியாட்கள் ஒரே இடத்தில் இராது இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டு இவை நடக் காதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். மேலும் நூலக அலுவலர் வருவோரிடம் தாராளமாகவும் அன்பாகவும் பழகி உதவுதலின் மூலமும் இவற்றினைத் தடுக்கலாம். - வருவோர் தமக்கு வேண்டியவற்றை எளிதில் எடுக்க, நூல்களை அவர் தமக்குதவும் வண்ணம் ஒழுங் காக வரிசையில் வைக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய நூல்கள் அனைத்தும் ஒன்றை பொன்று தொடர்புள்ளதாய் தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட வேண்டும். பொருள் வாரியாக நூல்களைப் பிரித்து அதன் பின்னர் அதற்குரிய குறியீடுகளை அல்லது எண்களைக் கொடுத்து அதன்படி அடுக்கி வைத் தல் வேண்டும். இதன் காரணமாய் வருவோர்க்குக் காலம் வீணுவதைத் தவிர்க்க முடியும். மக்களும் சிரமம் சிறிதுமின்றி விரும்பிய நூல்களை எடுத்துப் படிக்க முடியும். * அடுத்து நமக்கு வேண்டியது நூல் பட்டியல் தொகை (Catalogue) ஆகும். நூல்கள் அதிகம் கையாளப் படுவதற்கும், படிப்போர் தாம் விரும்புவதைத் தாமே தேடி எடுத்துக் கொள்வதற்கும், நூலகத்தில் இருக்கும் ஆால்களைப் படிப்போர் தெரிந்து கொள்வதற்கும், கால இழப்பைத் தடுப்பதற்கும் நூல் பட்டியல் தொகை பெரி தும் உதவுகின்றது. வருவோர்க்குக் குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் பெயர் தெரிந்திருக்கலாம். அன்றி அதன்