பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வேண்டும்போது கட்டடத்தை மேல்நோக்கியாகிலும் விரிவுபடுத்தலாம். - " - நூலகம் வளரும் தன்மையது என்பதை உணர்ந் தோரும்கூட அதன் வளர்ச்சிக்கு ஏற்ப அலுவலரைப் பெருக்குவதில் அக்கரை காட்டுவதில்லை. இதல்ை ஆர்வம் உள்ள அலுவலர்க்கும் பெரும் திண்டாட்டம்ஏற்படுகிறது. வளர்ச்சிக்கு ஏற்ப அப்போதைக்கப்போது உதவிக்கு ஆள் கேட்டால் இதே தொல்லையாய்ப் போயிற்று' என எரிந்து விழவும் செய்கின்றனர். இதல்ை விரும்பிய அளவில் ஒரு பகுதியோ, சொல்லிக்கொள்ளும் அளவில் பாதியோகூடத் தொண்டாற்ற இயலாது போகிறது. விளம்பரத்தால் படிப்போர் அதிகமாவது போலவே, நூல் களும் அதிகம் கிடைக்கின்றன. இதல்ை ஏற்படும் தடங் கலும் தவக்கமும் படிப்போரின் புகாரையும், குறும்புக்கார ரின் வம்பையுமே கிளப்புகின்றன. இதல்ை சில வேளை களில் நூலகத் தல்பவா எககேடு கெட்டால் என்ன என்று எண்ணத் தொடங்கி விடுகின்ருர். இதல்ை படிப் போர் வருவது கெடுகிறது. எனவே நூலகத் தலைவர் வேலைப் பெருக்கத்திற்கு ஏற்ப அலுவலரைப் பெருக்கு வதற்கு வாய்ப்பளிக்கவேண்டும். ஒரு நூலகம் வளரவேண்டிய அளவிற்கு வளர்ந்து விட்டதென்ருல், படிப்போர் மாறுவர்; புதிய நூல்களும் வந்து கொண்டேயிருக்கும். புதுப்புது மனிதரைப் பெற நூலகம் விளம்பரங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். புதிய நூல்களும் புதிய மக்களும் வந்தால் நூலக அலுவலர்க்கு இடைவிடாது பணிகளும் இருக்கும். மேற்கூறிய ஐந்து விதிகளையும் நூலகப் பணி புரிவேரர் என்றுமே மறந்து விடுதல் கூடாது. முதலில் நூலகக் கட்டடம் பார்ப்பதற்குக் கவர்ச்சியாயும் அழகாயும்