பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பன்னெடுங்காலம் பல துறையிலும் சீரும் சிறப்பு முற்று, ஒவ்வோர் இயலுக்கும் இலக்கணம் பெற்றி ருந்த தமிழினம், இன்று வேற்று நாட்டார்-மொழி யாளரிடமிருந்து அறிவைப் பெற வேண்டிய நிலைக்கு வந்ததன் காரணம், நூலக அமைப்பியல் செம்மை யுறப் பெருதிருந்ததே என மூத்த குடியை நாம் பழிப் பினும் நன்ரும். இந்நிலைக்கு நாமும் ஆளாகாது, நாம் பெற்ற அறிவுச் செல்வத்தை நன்முறையில் பாதுகாத்து, பின்னேர் பயனடையும் வகையில் நூலக அமைப் பியல் பற்றிக் கருத்திருத்தல் நலமாம். -- மேலும் இன்றைய உலகியல் வாழ்வில் தனி மனிதன் ஒவ்வொருவனும் நூலினைப் பெற்று அறிவு வளர்ச்சி அடைதல் இயலாத தொன்ருய் இருப் பதலுைம் நூலக அமைப்பியல் மிக மிக இன்றி யமையாத தாகிறது. இவ்வளவு சிறப்புடைய நூலக அமைப்பியல் பற்றித் தாம் கற்றுத் தேர்ந்தவற்றுடன், பல ஆண்டு அநுபவத்தின் வளத்தோடும் ஆசிரியர் இந்நூலினை நன் முறையில் எழுதியுள்ளார். தமிழுலகம் இதனை ஏற்று, நூலகத்துறையில் அதிக ஊக்கம் காட்டும் முகத்தான், மேலும் எம்மை இப்பணியில் ஊக்கு விக்குமென நம்புகிருேம். ஒளவை நூலகம்.