பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நூலகக் கட்டடமும் கருவிகளும் நூலகக் கட்டடம் கட்டுவதற்கு முன்னர், ஒரு நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அடுத்து அதற்கு அடிப்படை யாக என்னென்ன வேண்டும் என்பதையும் அறிதல் வேண்டும். பின்னர் நூலகத் தலைவரைக் கலந்து நூல கத்தினை அமைத்தல் வேண்டும். ஆனல் பழைய நாட் களில் இவ்வாறு செய்யாது போயினமையால் நூலகக் கட்டடங்கள் சிறந்த முறையில் அமையப்பெறவில்லை. ஒரு நூலகக் கட்டடம் எழுப்பப்படுவதற்கு முன்னர், 'இன்னின்ன முறைகளில் நூலகம் கட்டப்பட வேண்டும்’ எனத் தொழிலறிவுள்ள நூலகத்தலைவர் தரும அறிவுரை கள் இன்றியமையாதன ஆகும். இது இன்று ஓரளவு உணரப்பட்டு விட்டது. முதலில் நூலகத் தலைவர் நூலதக் கட்டடத்தின் நில அளவுப் படத்தை அமைக்க வேண்டும். பின் கட்டட்க் கலைஞர், அதன் துணை கொண்டு நூலகத்தை உருவாக்க வேண்டும். பின்னவர், இதல்ை தம் மதிப்புக் குறைந்து விட்டது என்று எண்ணுதல் தவறு. கட்டட வெளிப்புறத்தை அமைப்ப தற்கு முன்பாக உட்புற அமைப்பைச் சிந்திக்க வேண்டும். அறைகள் இருக்க வேண்டிய இடம், எந் தெந்தத் துறைகள் எங்கெங்கிருத்தல் நலம் என்பவற்றை முதலிலேயே சிந்தித்துக் கொள்ளல் நலம். நூலகம் பலதரப் பட்ட நோக்கங்களுக்காக் கட்டப் படுவதால், அந் நோக்கங்கள் நிறைவேறுதற் கேற்ருற் போலக் கட்டடம் அமைய வேண்டும்.