பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வழங்கும் பகுதிக்கும் வாயிலுக்கும் இடையிலேயே அமைத்து விட்டால் முதியோர் பகுதிக்குள் குழந்தைகள் நுழைவதைத் தடுத்து விடலாம்;படிப்பதற்கேற்ற ஒளியும் இயற்கையாகக் கிடைக்கும். உடனுதவும் நூல் தொகுதி உள்ள பகுதிக்கு நல்ல வெளிச்சமும், அமைதியான சூழ் நிலையும் வேண்டுமாதலால் கட்டடத்தின் பிற்பகுதியி லேயே அதை அமைத்தல் சாலச் சிறந்ததாகும். நூலகத்துள் சொற்பொழிவு மண்டபம் வேண்டு மெனில் நூல் வழங்கும் பகுதிக்குப் பின் அமைக்க வேண் டும். ஆல்ை சொற்பொழிவு நடக்கையில் போவோர் வருவோரால் நூலகத்துள் ஒலிவராதிருக்க மண்டபத்தின் உள் வழியாக தெருவை நோக்கித் தனிவழி அமைக்க வேண்டும். நூலகத்திற்கு இரு மருங்கிலும் கட்டடங்கள் rொகப் பின் நானகு அலலது بئ وېبئب அடிகள திறந்த வெளி இருத்தல் சிறப்புடைத்து. இதஞ்ல் சொற்பொழிவு மண்டபத்திற்குச் செல்வோர்க்குத் தனி வழி கிடைக்கும். படிப்போர்க்கும் அதிக ஒளி கிடைக்கும், | இதுவரை எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் ஒரு ஊரிலுள்ள ஒவ்வொரு இருபதாயிரம் மக்களுக்கும் ஆயிரம் சதுர அடிகள் குறைந்த அளவு தேவை. 40,000 மக்கள் உள்ளனர். எனில் 2000 சதுர அடி தேவை, அதாவது 130 பேர் இருக்கை வசதிகளோடு இருந்து படிப்பதற்கு 50'X40 என்ற அளவில் அறை தேவை. தனி ஒரு மனிதனுக்கு 15 சதுர அடிகள் தேவை. இதில் நடைபாதையும், நாற்காலி, பலகைகள் வைக்கும் இடமும் அடங்கப்பெறும். உடனுதவும் நூல் பகுதியிலோ, 20000 பேர் உள்ள ஊரினதாயிருந்தால், 30க்கு மேலா னேர் படிக்கும் இடம், தனி ஒருவனுக்கு 30 சதுர அடிகள் அளவில் ஒதுக்கப்பட வேண்டும். இதில் நடைபாதை,