பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கண்காணித்தற்கு ஏற்றவாறு தடுப்புகள் அமைக்கப் படல் வேண்டும். கண்ணுடிபோன்ற ஒளி ஊடுருவும் பொருள்களாலான தடுப்புகளால் மிகுதியான ஒளி கிடைக்கும். -- இற்றை நாளில் பொது நூலகத்தில் முக்கியமான பகுதி பேச்சு மண்டபமாகும். ஒவ்வொருவருக்கும் 5 சதுர அடிகள் வீதம் 200 மக்களுக்கு 1000 சதுர அடிகள் கொண்டதாய் இருக்கவேண்டும். நூலகத்தில் இயற்கை ஒளி குறைந்த பகுதியை இதற்கு ஒதுக்கலாம். ஏனெ னில் சில வேளைகளில்தான் இம்மண்டபம் பயன்படுத்தப் படும்; தேவையானல் மின்னுெளியைப் பயன்கொள்ள லாம். நூலகத்தின் முன் பகுதியைச் சிறுவர் பகுதியாக்கி, நடுப்பகுதியை முதியோர் பகுதியாக்கி, கடைசியில் பேச்சு மண்டபத்தை அமைத்தலே நலம். தலைமை நூலகம் சந்தடியான வணிகப் பகுதியில் இருப்பின் அங்கேயே சிறுவர் பகுதியையும் பேச்சு மண்ட பத்தையும் அமைப்பது நல்லதன்று, கிளை நூலகம் இல்லையென்ருல் தலைமை நூலகத்திலேயே வைத் திருந்துவிட்டு, பின்னர் கிளை தோற்றுவிக்கப் படும்போது அவற்றிற்கு மாற்றிக்கொள்ளலாம். இதன் காரணமாய், தலைமை நூலகத்தில் மேலும் மேலும் வருகின்ற நூல்களை வைப்பதற்கும், படிக்கும் இடத்தை விரித்தற்கும் வாய்ப்பு ஏற்படும். - = * * கட்டடத்தில் கலை நுணுக்கங்காட்டவேண்டும் என்ப தற்காகப் பரந்த இட அமைப்புக் கிடைப்பதை ஒரு போதும் இழக்கக்கூடாது. சாரளரங்களை எவ்வளவு பெரி தாய் அமைக்கமுடியுமோ அவ்வளவு பெரிதாய் அமைக்க வேண்டும். தீப் பிடிக்காத பொருள்களைக் கட்டடத்தில் எவ்வளவு பயன்படுத்தமுடியுமோ அவ்வளவு பயன்