பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தரையுடன் விளங்கவேண்டும். சில நூலகங்களில் பூவேலைகள் நிறைந்த கம்பளம் போன்றவற்றைத் தரை யில் விரிக்கலாம். இவ்விரிப்புகள் நடப்பதற்கு மிருது: வாயும், கவர்ச்சியாயும் இருக்கும். ஆனல், அவை அதிக விலையாவதோடு விரைவில் கிருமிகள் அடைவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. எவ்வளவுதான் அவற்றை அடிக்கடி துய்மைப்படுத்திலுைம் சீக்கிரம் கெட்டுவிடும். நூலகம் காற்ருேட்ட முள்ளதாய் இருத்தல் அவசி யம். இது மிக மிக முக்கியமான தொன்ருதலால் இதில் கவனம் செலுத்தல் வேண்டும். சிறந்த காற்ருேட்டம் நூலகத்தில் இருக்கும் வண்ணம் எல்லா வகையானும் செய்தல் சாலச் சிறந்ததாகும். சன்னலை மட்டும் நம்பி இருக்கும் எந்த நூலகமும், கோடையிலும் சரி, குளிரிலும் சரி, தன்னிடம் வருவோரை நிறைவு படுத்த முடியாது, பல முறைக்காற்ருேட்ட அமைப்புடனும், காற்ருேட்டப் பொறிகள் பொருத்தப்பட்டும், இன்று அமைக்கப்படும் புதிய லகங்கள் இருக்கின்றன. வெளியில் உள்ள ஒலி உள்ளே கேட்கும் வகையில் இங்கே திறந்த சன்னல் கள்.கின்டயா, திறவாத சன்னல்கள் அமைத்தவற்றில் தூய காற்று உள்ளே வரவும், கெட்ட காற்று வெளியேற வும் துனைபுரியும் பொறிகளின் உதவிகொண்ட காற் ருேட்ட அமைப்பு வேண்டும். சிறந்த காற்று வசதி இருந் தால்தான் மக்கள் நூலகத்திலிருந்து படிப்பர். எனவே கட்டடம் கட்டும் போதே காற்ருேட்டத்திற்கு வேண்டிய நல்ல பல வசதிகள் செய்வதில் அக்கறை காட்டப்பட வேண்டும். இதைப்போன்றே நல்ல வெளிச்சமும் நூல கத்தில் இருக்கவேண்டும். முன்னர் குறிப்பிட்டபடி நூல கத்தில் இயற்கை வெளிச்சமும் ஏராளமாக வரும்படி அமைப்பது பற்றிக் கட்டடக் கலைஞருக்கும் நூலகத் தலை வருக்கும் கருத்து வேறுபாடுகள் உள. முன்னவருக்குக்