பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கட்டட வெளித்தோற்றத்தைப் பற்றியே கவலை. பின் கன வருக்கோ இயற்கை ஒளியை முடிந்த அளவு பெறுதற்கு ஏற்ப நூலகம் விளங்கவேண்டும் என்று கவலை. நூலகம் படிப்பதற்கு என்ற ஒரே நோக்கத்துடன்தான் அமைக்கப் படுகிறது என்பது யாரும் மறுப்பதற்கில்லை. போதிய ஒளியைத் தராத கலையழகு நூலகப்பணிக்கு இடையூறே யாகும். பலகணரிகள் பல கட்டடத்தின் அளவுக்கு ஏற்ப ஏறத்தாழ நான்கடி உயரத்தில் கண்ணுடிக் கதவுகளு டன் அமைக்கவேண்டும். இந்த முறையால் மிகுதியான திறந்த அலமாரிகள் வெளிச்சத்தைப் பெற முடியும். மேலும் மிகுந்த ஒளி வேண்டு மென்பதற்காக மின்விளக்குகளுக்குச் செல வழிப்பதையும் தவிர்க்கலாம். 4