பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இருத்தல் அவசியம். அதனது உள் நீள அகல உயரம், முறையே பின்வரும் அளவினதாக இருக்கவேண்டும். 12”×3基”×3番”・・。。。 「 நூல் பட்டியல் தொகை அட்டைகளடங்கிய பெட்டி, நூல் வழங்கும் மேசைக்கும் நூல் அலமாரிகளுக்கும் இடையே இருத்தல் நலம். இப்பெட்டியில் 15 அறைகள் வரை இருக்கலாம். நூலகம் படிப்படியாக வளரக்கூடியதா தலால், 20 அறைகள் கொண்ட பெட்டியாகவும் செய்து கொள்ளலாம். செங்குத்தானதாக இப்பெட்டியைச் செய்து நான்கு கால்களால் தாங்கப்பட்ட சமதளமான மேற். பாகத்தில் வைக்கவேண்டும். ஒவ்வொரு அறையின் நடுவிலும் அதன் நீளத்திற்கு இரும்புக் கம்பியொன்று செல்லவேண்டும். அறைகளின் வரிசைக்கு நடுவே, அறைகள் வெளியே முழுதும் இழுக்கப்பட்டுவிட்டால், தாங்கிக் கொள்வதற்கு ஏற்றபடி, இரு பலகைகள் வைக்க வும். இவை, நினைத்தபோது உள்ளே தள்ளவும் விரும் பியபோது வெளியே இழுக்கத் தக்கனவாயும் அமைதல் வேண்டும். ஒவ்வொரு அறையின் முகப்பிலும் இழுத்துத் தள்ளுவதற்குரிய வகையில் கைபிடி இருக்கவேண்டும். மேலும் அறையின் உள்ளே இருக்கும் அட்டைகளைப் பற்றிக் கூறும் சீட்டுகளை பொருத்தும் வண்ணம் முகப் loso #1. G3 orišić (Label holder) இருத்தல் சாலச் சிறந்தது. நூல்கள் திறந்த அலமாரிகளில் வைக்கப்பட்டால் தான் மக்கள் அவைகளைத் தாமே எடுத்து, படித்து இன் புறுவர். இவ்வலமாரிகள் ஐந்தரை அடிக்குமேல் உயரம் இல்லாதனவாய் இருக்கவேண்டும். இவ்வலமாரிகள் எஃகாலும், நல்ல மரத்தாலும் செய்யப்பட்டிருக்கலாம். ஆனல் எல்லாம் ஒரே அளவினதாக இருந்தால் பார்ப்ப தற்கு அழகாக இருக்கும். நூல் அலமாரிகளில் ஒவ்வொரு