பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தலைமை நூலகங்களுக்கும் கிளை நூலகங்களுக்கும் இடையே சரியான தொடர்பும் செயல் முறையும் இன் றேல் மாநில நூலகக் குழுவினர்’ போன்ருர் ஒன்றும் செய்யமுடியாது. உள்ளுர் நூலகக்குழுக்கள் (Local Library Authorities) babso Lisoflurfbgenugrab p_airess5f பற்றியவைக்கு அவ்வகை நூலகங்களையே பயன் படுத் தலாம். உள்ளூர் நூலகக்குழுக்கள் வெளிப்பகுதிகளுக்கு உதவப் போதியபணமின்றேல், அவ்வப்பகுதினர் போதிய பணஉதவி செய்யவேண்டும். அப்படியும் பற்ருக்குறை ஏற்படின் மாநில நூலகக் குழுவினர்-அரசினர் உதவித் தொகை கொடுத்து உதவலாம்-உதவும். மக்களும் நூலகத் தாரின் பயனுள்ள ஒத்துழைப்பைப் பெறுதலானும் தமக்கு வேண்டிய நூற்களைப் பெற முயல்வதானும் தக்க அக்கறை காட்ட வேண்டும். நூலகத்தின் வெற்றி தனி TTTTTTTT TT STTTTT AAAA SAAAAA AAASAAAA S TTAAAA வைப் பெறுவதிலேயே இருக்கிறது. தனிப்பட்டோரும் பயனடைய மேலும் பல நூலகங்கள் வேண்டும். மக்கட்கு நூலகத் தொண்டுகளை ஆற்றும் இடங்களுக்குத் தொண்டு நிலைகள் (Service points) என்று பெயர். தொண்டு நிலை கள் தம் அளவிலும் அமைப்பிலும் பலவகைப் படு கின்றன. பெருந் தலைமை நூலகங்கள், கிளை நூலகங்கள், சுற்றும் நூலகங்கள், அஞ்சல் நூலகத்தொண்டு, வழங்கும் ஆாலகங்கள் அல்லது வழங்கும் நிலைகள் எனப் பலவகை உள. தலைமை நூலகம் என்பது (Central Library) நக ருள் பலகிளைகளை வைத்துக்கொண்டு தலைமையாக இயங்குவது அல்லது நகர் நூலக முறையையும் நாட்டுப் புற நூலக முறையையும் இணைத்துப் பணியாற்றுவது ஆகும். சிறுநகர்களில் எவ்வகைக் கிளையும் இன்றி இயங்குவன நகர நூலகங்கள் (Town Libraries) எனப் படும்.