பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. குழந்தை உரை, வேருென்றில் தருமபுர ஆதின உரை என இருக்க வேண்டும். பல உ ைர களை யும் படிக்க விழைவோர் பலவற்றிற்கும் வருவரன்ருே: வராவிடினும் ஒரு நூலகத்தின் துணைகொண்டு மற்ருெரு கிளையிலுள்ள உரையினையும் வாங்கிப் படிக்கக் கூடிய வசதிகளும் இன்று உள்ளன. மாவட்டக் கிளைகளில் உள்ள எல்லா நூற்களின் பட்டியலும் ஒவ்வொரு கிளையி லும் இருத்தலோடு, எந்த நூலகத்திலும் எந்நூலைப் பெறுதற்கும் படிப்பவருக்கு வாய்ப்பு வேண்டும். உறுப் பினர் பதிவு தலைமை நூலகத்திலேயே நடந்தால், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயலும். பெரும் மாவட்டமாயின் அதன் கிளைகளில் ஒத்த வேலை முறை, நல்ல வளர்ச்சி முதலியன ஏற்படவும்,அவ்வப் பகுதியினை ஆய்ந்து தேவையானவற்றை அறியவும், திங்கள் தோறும் சுற்றுப்-பயணம் செய்து ஊக்கமளிக்க, உதவிதர கண்காணிப்பாளர் ஒருவர் மாவட்ட நூலகத் தலைவருக்கு உதவியாய் இருத்தல் நலம். பட்டியல் போடுவதோடும் முறைப் படுத்துவதோடும் மாவட்டத் தலைமை நூலகம், நூல் தேர்வு, குழு நடவடிக்கைகள், நிதிவளம் மற்றும் கிளை நூலகம் பற்றிய அனைத்தையும் கவனிக்க வேண் டும். இப்படித் தலைமை நிலையத்திலிருந்தே திட்டம் தீட்டப் படுமானல் கிலை நூலகத்தார் அனைவரும் தலைமை நூலகத்திலே சில காலம் பயிற்சி பெற்று எவ்வித இடை யூறு மின்றி. இனிது பணியாற்றலாம். - வழங்கு நிலை அல்லது வழங்கு நூலகம் என்பது 'ஏதோ இதையாகிலும் செய்வோமே என்ற நிலையில் தான், கிளைகளில்லா இடங்களில் தோற்றுவிக்கப் படுகின் றன. அவை அவ்வளவு சிறந்தவை என்று சொல்வதிற் கில்லை. ஏனெனில் நாம் கேட்டெழுதிய நூற்கள் வராத பொழுது தலைமை நூலகம் எந்த நூலை அனுப்பு