பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 போக்குக் கழகங்கள், தீயணைக்கும் நிலையங்கள் போன்ற வற்றில் சேர்த்து வழங்கலாம். பொருள் வளமுள்ள மாவட்டத்தார் பெருங்கிளைகள் பல அமைத்துக் கொள்ள லாம். அண்மையில் சிகாகோவிலும் மற்றைய அமெரிக்க நகர்களிலும் வட்டாரக் கிளை நூலகங்கள் அமைத்தது போல் அமைத்துப் பலன் பெற பல செயல் முறைகளைக் கையாள வேண்டும். பல கிளைகளுக்கு வேண்டிய நூற் களையும் பிறவற்றையும் இவ்வட்டாரக் கிளைகளே பெற்று வழங்குதல் வேண்டும். இது தலைமை நூலகத்திலிருந்து நூற்களைப் பெற்று கிளைகளுக்குக் குறைந்த வழிச் செல வில் தரலாம்; படிப்பதற்கு வட்டாரத்தைப் பொறுத்த மட்டில் சிறந்த இடமாகலாம்; இரவலாக நூற்களைத் தரலாம். வேறு பல வழிகளிலும் பொருளைச் சிக்கன மாகச் செலவிடலாம். சுற்றும் நூலகங்கள் மூலமாக படிப்பவன் தன் தேவைகளைப்பெரும் நூலகங்களிலிருந்து பெறுவது போல் வழங்கு நிலைகளிலும் அவை போன்ற வற்றிலும் இயற்கையாகவே பெறலாம்.