பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சுற்றும் நூலகம் (Travelling Library) சுற்றும் நூலகம் போல்-நூல் வண்டிபோல்.தொ. விலுள்ளோரைத் தேடிச் செல்லும் நூலகம் போல் நூல கத்தலைவனுக்கும் மக்களுக்கும் உதவுவது வேறில்லை இருக்கும் இடம் தேடி வந்து அறிவுக்கு உணவு தருகை யில் மக்கள் அடையும் பயன்கள் அளவிறந்தன. சுற்றும் நூலகம் புதுமையின் படைப்பு; துனிவின் வெற்றி, கார் தத்தின் கவர்ச்சி. இது அவனவனுக்கு எழும் ஐயத்தை சிக்கலை அவன் இடம் தேடிச்சென்று நீக்கி அறிவொளி ஏற்றுகிறது இது சிற்றுார்ப்பகுதிகளில் மட்டுமன்று; பெரு நகரின் எல்லைப் பகுதிகளிலும் பேருதவி செய்கிறது. சுற்றும் நூலகம் என்பது, பொதுவாக நெய்யாவி ஊர்திகளில் (Motor Wan) நூல்களும், சிறுநூல் வழங்கும் பகுதியும் (Counter) கொண்டதாக உள்ளது.பெரும்பாலும் இரண்டாயிரம் நூல்கள்வரை அதில் வைப்பதற்கு வசதி இருக்க வேண்டும். சுற்றும் கிளை நூலகங்கள் என இவை பெயர் பெறுகையில் பெருநகர்களின் எல்லைப் பகுதிகளில் உள்ளோர்க்கு உதவுகின்றன. நாட்டுப் புறங்களில் பயன் படுகையில் சுற்றும் நாட்டுப்புற நூலகங்கள்' எனப் படுகின்றன, குறிப்பிட்ட சில இடங்களுக்கு நூல்களடங் கிய பெட்டிகளை (Box) அவை எடுத்துச் செல்லுமானல் 'நூல்வழங்கும் வண்டிகள்' என்பர். சுற்றும் நூலகங்கள் எவற்றிலேனும் நூற்கள் அழகாக அடுக்கப்பட்டு தனியாரும் நிலையத்தாரும் விரும்பும் நூற்களைப் பொறுக் கிக் கொள்ளும் வசதி உடையதாயின் அது 'கண் காட்சி வண்டி’ எனப்படும்.