பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பல உணவுப் பொருட்களைத் தருதற்கும் பல நெய்யாவி வண்டிகள் (Van) பெருநகர்களில் அங்கங்கே செல்வதை நாம் அறிவோம். உடலுக்கு உணவுதரும் அவை: போன்றே இவை அறிவுக்கு உணவு தருகின்றன. அங்கு மிங்கும் சென்று. முன்னுளைய பரோடா அரசால் ஒரு திட் டம் தொடங்கப்பட்டது. "நாட்டுப்புற நூலக வண்டி (Bul1ock cart) நூல்களடங்கிய பெட்டிகளை எடுத்துக் கொண்டு அப்பெட்டிகளை ஒவ்வொரு சிற்றுாரிலும் உள்ள குறிப் பிட்ட இடங்களில் கொடுத்துச் செல்லும். திறமையும் விரைவும்வெற்றியும் குறைந்த செலவும்கொண்ட இத்திட் டம் பரோடா அரசு கைமாறிய பின்னும் நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையில் ஒரே ஒரு குறைதான். இதில் போதிய அளவு இருக்கை வசதிகள் இல்லை; இத னைக்கானவரும் பலருக்கும் மழையிலும் வெய்யிலிலும் இருந்து தப்ப ஏற்ற வசதிகள் இல்லை. சுற்றும் நூலகங் கட்கு நகரப் பகுதிகளைவிட நாட்டுப்புறப் பகுதி களில்தான் அதிகப் பணிகள் உள்ளன. நாட்டுப் புறத்தில்தான் நூலகப் பணிக்கு முதுகெலும்பாய் இருக்கிறது சுற்றும் நூலகம். பின்னல் அமைக்கப்படும் நூலகங்களின் வெற்றிக்கும் திறவு கோலாய் உள்ளது. நாட்டுப்புறத்தாரின் விருப்பங்களை அறிந்து எல்லாவகை நூற்களும் அடங்கிய 2000 நூற்களை அடுக்குகளில் அடுக் கிச் சென்ருல், அந்நூற்களைக் காணுவதற்கு மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வருவர். நூற் பெட்டிகள் என் பன சிறிதளவு நூற்களைத்தான் அடக்கிக் கொள்ள முடியும். வண்டிகளில் அடுக்குகளை அமைத்து விட்டாலோ 2000 நூற்கள் வரை கொண்டு செல்லமுடியும். நாட்டுப் புறங்களில் நூலகக்கட்டடங்கள் கட்டுவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் செய்யும் செலவை இந்த வழிகளில் பயன்படுத்தலாம். எங்கும் நல்ல சாலைகள் இருக்காது