பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 10 நீளத்தில் 4 அகலத்தில். இருக்கிறது. கோச்சு வண்டிகளில் உள்ளது போல் வண்டியோட்டியின் அறை இருக்கின்றது. மக்கள் உள்ளேவரக் கதவுகள் திரைகளுடன் விளங்குகின்றன. இதல்ை தூசி முதலியன விழுவது ஓரளவு தடுக்கப்படும். காற்ருேட்டத்திற்காகப் பக்கங்களில் 12 துரக்குக் கதவுகளும் பின்புறத்தில் 2 துரக் குக் கதவுகளும் உள்ளன. கார் ஓடாத போது கிளேய்ட் டன் முறைப்படி வெப்பம் உண்டாக்கலாம். நான்கு விளக்குகள் ஒவ்வொரு புறத்திலும், நூல் வழங்கும் இடத் தில் இரு விளக்குகளும் உள்ளன. அவை தனித் தனியே மின் ஆற்றல் கம்பியைப் பெற்றுள்ளன. காலுக் கடியில் டயர்களும் அதிக நூற்பெட்டிகளும் வைப்பதற்கு வண்டியில் வசதி இருக்கிறது. நூலடுக்குகள் இரு பக்கங் களிலும் வண்டியின் பின் பகுதியிலும் உள்ளன. வழங் கும் பகுதி நூலடுக்குகளையும் வண்டியோட்டியின் அறை யையும் பிரிக்கும. 1" கனமுள்ள பலகையில் 9" உயரத் தில் 8 அடுக்குகள் கதை நூற்களுக்கும், பிற்பகுதியிலும் அதை ஒட்டிய இடங்களிலும் ஆறு அடுக்குகள் பிற நூற் களுக்கும் உள்ளன. பொதுவாக இவ்வடுக்குகளில் முறையே 1100 நூற்களும் 900 நூற்களும் வைக்கலாம்.