பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. affairlourio (Publicity) வளர்ச்சியுருத நாடுகளில், கற்ருேரின் எண்ணிக்கை கீழ்த்தளத்திலேயே கிடக்கிறது. பல்லாண்டுகளாய்ப் பிற நாட்டார், இவர்தம் உரிமைகட்கு விலங்கிட்டிருந்தனர் ; அடிமைக் கணையால் கொத்திக் கிழித்தனர். வறியோராய், வழிஅறியாதோராய் வாடினர் இம்மக்கள். அதல்ைஇந்தத் தனிமனிதன் ஒவ்வொருவனும் நூல்கள், நூலகங்கள் ஆகியவற்றின் பயனைச் சிறிதும் அறியவில்லை. பாமர மக் களைக் கவரும் வகையிலும், பிற ஏற்ற வழிகளிலும் நூல கங்களை விளம்பரப்படுத்த வேண்டும். புதிய விடுதலை ஒளி சிந்தும் நாடுகளில் இது உயிர்ப்பணிகளுள் ஒன்று. நூலக நலன்களை விளக்கும் இவ்விளம்பர வழிகள்தான், முறையாக அமைக்கப்பட்ட நூலகங்களின் மதிப்பை மக் கள் உணர்வதற்கு வழி வகுக்கும். அடுத்து விளம்பரம் என்ருல் என்ன என்பது குறித்து எழுதுவோம். கண்காட்சிகளாலோ பிறவழிகளாலோ ஒன்றைப் பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு வரு தலே இதன் பொருள். நூலக விளம்பரங்கள் ஏற்கனவே தம்மிடம் இருப்பவற்றையும் புதிதாக வந்தனவற்றையும் படிப்போரின் பார்வைக்கு வைக்கின்றன. அதன் மூலம் நூலகத்தில் அறிவு விருந்துண்ண அழைக்கின்றன. இத ல்ை நூலகங்கள் மக்கட்கு மிகவும் அறிமுகமாகின்றன. படிப்போர் நிறைய வருகின்றனர். அத்துடன் நாளும் பல புது மனிதரை நூலகத்திற்கு ஈர்க்கின்றன. ஆமாம்! இது நூலகப் பணிகளுள் தலையாய ஒன்று. 'உலகின் கருத்துக்கள் விரைந்து மாறுகின்றன. ஆாலக அமைப்பின் கருத்துக்களும் அவற்ருேடு நடை