பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சமூகத்திற்கு உதவுகிறதோ, அச்சமூகத்தின் உண்மை யான அறிவுக் களஞ்சியமாகத் திகழ, நூலகத் தலைவர் அந்நூலகத்தை வருகின்ருேள் உள்ளத்தை எல்லாம் கவச ரும் வண்ணம் அமைத்தல் வேண்டும். விளம்பரங்களைச் செய்யவேண்டும்; மற்ற பல வழிகளையும் திறமையோடும் துாய்மையோடும் செய்யவேண்டும். தென் கிழக்காசிய நாடுகள் போலக் கற்ருேர் தொகை குறைவாயிருக்கும். நாடுகளில், தொடக்க நிலையில் மக்கள் நூலகங்களுக்குச் செல்வதை முழுவதும் மறுத்து விடுகின்றனர். அம்மக் கள் நூலகங்கட்கு வரவில்லையானல், நூலகங்கள் அறிவுச் Glæsbestà655, Bes(5th sprev&sétésair (Travelling Libraries) மூலம் இருக்குமிடம் தேடித் தரவேண்டும். நகரும் நூல கங்களை அமைத்தற்கும், படிக்கும் ஆர்வத்தை மக்களி டைத் துாண்டுவதற்கும், நூலகத் தலைவரிடம் பொறுமை, துணவு, ஒழுங்கு முதலியன இருக்கவேண்டும். சிறிய ஒராசிரியர் பள்ளி, வயலில் வியர்வை வடிக்கும் உழவன், இல்லற மாதர், நகைமுகக் குழந்தைகள் என தொலை வான சிற்றுார்களில், மதிப்பற்ருேராய், முதியோராய், அகக் கண்ணற்ற குருடராய்க் கிடப்போர்க்குதவ, நகரும் நூலகங்கள்; துரசியும் கல்லும், மேடும் பள்ளமும் நிறைந்த சாலைகளிலும் செல்ல வேண்டும். நூலகத்தின் பணிகளையும் பயன்களையும் மக்களை உணர வைக்க, கவரும் வகையிலும் நல்ல அமைப்பிலும் உள்ள செல்வாக்குப் பெறும் விளம்பரங்கள் மிகத்தேவை. அதற்குப் பின்வரும் வழிகளைக் கையாளலாம். 1. துண்டறிக்கைகள் சுவரொட்டிகள் மூலம் விளம் பரம் செய்தல் : நூலக அறிவிப்புப் பலகையிலும், அந்தப் பகுதியில் வேறு பல முக்கிய இடங்களிலும், படிப்போர் பார்வைக்காக, புதிதாகச் சேர்க்கப்பட்ட நூல்களின் விவ. சங்களை ஒட்ட வேண்டும். இயன்ருல் புதிய நூல்களின்