பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பட்டியலை, உள்ளூர்ச் செய்தித்தாள், திரையரங்கம். வருனெலி நிலையம் முதலியவற்றின் மூலம் விளம்பரம். செய்யலாம். படங்களின் மூலம் நூலகங்களின் பயன்களை உணர்த்தும் கவர்ச்சியான சுவரொட்டிகள் அந்தந்த வட்டாரங்களில் ஒட்டப் படவேண்டும். வானெலியும், திரையரங்கும் செல்வாக்குள்ள கருவிகளாக நூலக விளம் பரங்கட்குப் பயன் படுத்தலாம். 2. நேரிடையான தொண்டால் விளம்பரம் செய்தல். இது நூலகத்தைப் பயன்படுத்தும் மக்கட்கு உடன் உதவுதலும் பிற துணைகள் புரிதலும் உள்ளடங்கிய முறையாகும். நூலகத்திற்கு மக்களை ஈர்க்க, இலக்கியத். துறையில் புகழ் வாய்ந்தோரையும் மற்ற அறிஞரையும் நூலகத்திற்கு அழைத்து அங்கு சொற்பொழிவாற்றச் செய்யவேண்டும், நூலகத்தின் அன்பான அழைப்பாலும் நட்பான துணைகளாலும் படிப்போர் இவை பற்றித். தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும், நூலகத் தலைவரின் கடமை இது. வருக! வருக ! நான் இங்குள்ளவற்றைஉண்மையை-அறிந்திருப்பதால் என் துணைக்கையைத். தருகிறேன்; ஏற்றுக்கொள்க' என நல்வரவு கூறித் துணை புரிவதற்கென ஒருவர் நூலகத்தில் இருக்கவேண்டும். குழந்தைகளை நூலகங்கட்கு ஈர்க்க, அங்கு அவை மகிழ் வோடிருக்க, நூலகம் வழக்கமாக ஒருவரைக் கொண்டு. கதை சொல்லவேண்டும். அவர் கதையைக் கூறி இந்த நூலில் இந்தக் கதை இருக்கிறது என விளக்கவேண்டும். 3. கண்காட்சிகள் மூலம் விளம்பரம் செய்தல்': சமூகத்தின் எப்பகுதி மக்கட்கும், நூலகத்தைபொலிவுள்ள தாக ஆக்க நூற்கள், பின்னல் வேலைகள்(பெண்களுக்கு) பண்ணைத் தானியங்கள் (உழவர்களுக்கு) பொம்மைகள், விளையாட்டுக்கள் (சிறுவர்களுக்கு) முதலியன நிறைந்த,