பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கண்காட்சிகளை நூலகம் அடிக்கடி நட்த்தவேண்டும். இது .நூலகத்துடன் மக்கள் நெருங்கித் தொடர்பு கொள்ளவும் அடிக்கடி வரவும் வழிகளை வகுக்கின்றன. உள்ளத்தைக் கவரும் வண்ணம் நூலகம் அமையக் கீழ்க்கண்ட வழிகளில் செயல் படலாம். 1. நூலகம் எந்த வட்டாரத்திற்குரியதோ அந்த வட் கடாரத்தின் நடுப் பகுதியில் அது அமைந்திருக்க வேண்டும். 2. நூலகத்துள் போதிய ஒளியும் காற்றும் இருக்க வேண்டும். - 3. இருக்கை வசதிகள் ஏற்றனவாக இருக்க வேண்டும். - 4. வீட்டிலிருப்பது போன்ற சூழ்நிலையில் நூலகம் அமைதல்வேல் டும். படிப்போா கூசசமோ தொல்லையோ இன்றி உள் நுழைத்து வேண்டிய துணைகள் பெறவும் தேவையான பொருள்களை எடுத்தாளவும் வசதிகள் இருக்கவேண்டும். 5. நூல்கள் எளிதில் கிடைக்க வேணடும். அத்தோடு நூலகக் கட்டுப்பாடுகள் எளியவையாய் இருக்க வேண்டும். வளர நிலையில் உள்ள நாடுகளில் மக்களை நேரில் கண்டு கலந்து உரையாடி நூலகத் தன்மையை விளக்க வேண்டும். நாட்டு நலனுக்குதவும் இந்த நூலக அமைப் பில் வெல்வ்தும்; எல்லோருக்கும் விருப்பூட்டுவதும்தான் புகழ் ஒளிரும் நாட்டைச் சமைப்பதற்குரியன.