பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 பூச்சிகளில் ஒன்ருன வெள்ளை எறும்பு (White ant) Fr மான இடத்தில்தான் வளர முடியும், பகலவன் ஒளியில் பட்டுவிடும். கட்டடச் சுவர்களுள் இவைகள் வாழ்கின்றன தாமே சுவரைக் குடைந்து தம் மாளிகைகளைச் சமைத்துக் கொள்கின்றன. இவற்ருல் நூல்களுக்கும், இருக்கைப் பலகைகளுக்கும் ஏற்படும் தீமைகள் கூறுவதற்கு அடங்கா. எனவே எங்காகிலும் வெள்ளை எறும்பின் மாளி கையைத் துப்பறிந்து கண்டு பிடித்து விட்டால், உடனே மண்ணெண்ணெயைக் கொட்டித் தீ எரிக்கவேண்டும். “iq. 14. lq.” (D. D.T.) Grldá4Reir (Gammaxene) Quiriq-souli பயன்படுத்தில்ை அதுவும் நல்ல பயனைத் தரும். எப்படி யாகிலும் அடிக்கடி பூச்சி புழு அழிக்கும் முறையினைப் பற்றி அறிந்துள்ளவல்லார் துணையைப்பெற்று முன் கூட்டி இப்பூச்சிகளின் தொல்லைகளினின்று நூலகத்தி லுள்ள நூல்களைப் பாதுகாத்தற்கு வேண்டியன செய்தல் நனறு. * * இறக்கைகளைப் பிரித்து உட்காரும் வண்ணுத்திப் பூச்சியின் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பூச்சியும் நூலின் பகைவகுைம். இதுவும் நூல் கட்டடத்தில் உள்ள துணி, கம்பளி, தோல் முதலியவற்றைத் தின்று வளர்கின்றன. இதனை ஆங்கிலத்தில் மோத்ட்ச் (moths) என்பர். மேலே குறிப்பிட்ட நூல் பகைவருடன் போருடற்ற விழையும் நூலகத்தார் பொதுவாகப் பின்வரும் வழிகளைக் கைக் கொள்ளலாம். முதலில் வேண்டுவது தூய்மை. அடுத்து வேண்டு வது அக்கறை. முறையாக அடிக்கடிதரையைக் கழுவுதல், அலமாரிகள், அவற்றிலுள்ள நூல்கள், இருக்கைகள் முதலியவற்றைத் துாசி துடைத்து வார்னிச் பூசுதல் ஆகியவை தலையாய கடமைகள் ஆகும். நம்மைப் போலவே நூல்களுக்கும் காற்றும் ஒளியும் தேவை. சிறு