பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புழு பூச்சிகள் நூலகத்தின் இருண்ட, புறக்கணிக்கப்பட்ட காற்ருேட்ட மில்லாப் பகுதிகளில்தான் பிறக்கின்றன; வளர்கின்றன. எனவே'எல்லா முயற்சிகளும் காற்ருேட்ட அமைப்புக்காக மேற்கொள்ளப் படவேண்டும். நூல்களை அலமாரிகளில் வெகு நெருக்கமாகவைக்கக் கூடாது.புகை யிலைப் புகையில் கலந்திருக்கும் அமோனியத்தில்ை நூல் களுக்குக் கெடுதல் விளையும். எனவே நூலகத்தில் புகைப் பிடித்தலை அனுமதிக்கக் கூடாது. காற்ருேட்ட மில்லா இடங்களில் உள்ள நூல்களை மூன்று அல்லது ஐந்து நிமி டங்கள் வரை சூரிய ஒளியில் அப்போதைக்கப்போது வைத்து எடுக்கவேண்டும். ஆல்ை தோல் கட்டடத்தா லாய நூல்களை இவ்வாறு செய்தல் கூடாது. ஏனெனில் இவைகளைச் சூரிய ஒளியில் அதிக நேரம் வைத்தால் நூல் கட்டடம் கெட்டுவிடும். பூச்சிகளைத் தடுக்க டி. டி. டி. பொடியை அடிக்கடி பயன் படுத்தவேண்டும். கற்பூரம், பாச்சா و ۔ا س لاتا شهری به பெராக்ச் முதலியவற்றைப் பட்டுப் பைகளிலிட்டு நூல் அலமாரிகளில் வைத்திருக்க வேண்டும்.