பக்கம்:நூலக ஆட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ருக்கவேண்டும். இப்பயிற்சி முடிந்த பின்னர் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நூலகம் அமைத்தல், நூலக ஆட்சி, மேற்கோள் நூற்றொகுதி, நூல் தேர்வு, நூல் வாங்குதல், நூல் தொகுத்தல், வகுத்தல், நூலக இயக்க வரலாறு முதலியன நூலகப் பயிற்சிப் பாடங்கள் ஆம். தாய்மொழி தவிர ஏனைய இந்திய மொழிகளிலும் அயல் நாட்டு மொழிகளிலும் உள்ள அறிவு மேலும் ஓர் உதவியாகும். அந்த அறிவு துணைத் தகுதியாகக் கருதப்படும். இதே துறையில் முதிர்கலைப் பட்டம் (எம். ஏ.) அளிக்கப்படுகிறது. தில்லிப் பல்கலைக் கழகம் நூலகத் துறையிலே இரண்டாண்டுகளில் முதிர்கலைப் பட்டம் பயிற்சி அளிக்கின்றது. இப்பட்டம் பெறுவோர் பின்னர் இதே துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் (Ph.D.) பட்டமும் பெறலாம். நூலகத் துறையிலே முதிர்கலைப் பட்டம் பெறக் குறைந்த அளவு வேண்டிய தகுதி அத்துறையில் ஒரு பயிற்சிப் பட்டமேயாகும்.

தேர்வுக் கட்டணம் :

1. முதிர்கலை :

1. நுழைவுக் கட்டணம்-15 வெண்பொற் காசுகள்
2. கல்லூரிக் கட்டணம் :
முதல் ஆண்டிற்கு-180 வெண்பொற் காசுகள்
இரண்டாம் ஆண்டிற்கு-216 வெண்பொற்காசுகள்
3. தேர்வுக் கட்டணம்-80 வெண்பொற்காசுகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/15&oldid=1111540" இலிருந்து மீள்விக்கப்பட்டது