பக்கம்:நூலக ஆட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. டாக்டர் (Ph. D.) :

1. மேற்பார்வைக் கட்டணம் (மாதமொன்றிற்கு) -20 வெண்பொற் காசுகள்.
2. தேர்வுக் கட்டணம்--100 வெண்பொற் காசுகள்.

நூலகத்துறை மாணவருக்கு நல்ல நினைவாற்றல், காரண காரியம் அறிதல், முறையான அறிவுத்திறன், ஆழ்ந்த புலமை என்ற குணங்கள் இன்றியமையாதன. நல்ல உடற்கட்டும், தெளிவான பேச்சும், நல்ல கண்பார்வையும் மிக மிக வேண்டியனவே. நூலகத் தலைவருக்கு முதலில் வேண்டியன நூல் மேல் மாறாக் காதலும் படிப்பதில் பருகுவனன்ன ஆர்வமும் ஆகும். மேலும் அவருக்குப் பலதிறப்பட்ட விருப்பங்களும் வேண்டும். குழந்தைகள். மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஓய்வு நேரப் பார்வையாளர்கள் (Leisure-time visitors), படிப்பாளிகள் என்ற அத்தனை பேருக்கும் உதவியான முறையிலே தம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

நூலகத் தலைவர் பதவிக்கு வழக்கம்போல விளம்பரங்கள் செய்யப்படும். அரசாங்க உயர்தர நூலகத் தலைவர்கள் (Gazetted Officers) பொதுப் பணிக் குழுவினாலோ (Public Service Commission) அன்றி பொறுக்குக் குழுவினாலோ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆய்வுக் கூடங்கள், கல்வி நிலையங்கள், சமூக, பண்பாட்டு, வணிக, தொழில் நிலைய அலுவலகங்கள் முதலியவற்றைச் சார்ந்த நூலகங்களிலும், நூலகத் தலைவர், உதவியாளர்கள் அமர்த்தப்படுவர்.

நாடு, வட்டாரம், பல்கலைக் கழகம், அமைச்சுத் துறை என்பவற்றைச் சேர்ந்த நூலகங்களிலே ஊதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/16&oldid=1111541" இலிருந்து மீள்விக்கப்பட்டது