பக்கம்:நூலக ஆட்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்பகத்தார் வார இதழ் (Publisher's Weekly):-
இவ்விதழ் அமெரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழாகும்.
௩. பதிப்பகத்தாரால் அவ்வப்பொழுது வெளியிடப்படும் துண்டு அறிக்கைகள் :

நூல் வணிகப் பட்டியல் முறையாக வெளியிடாத நாடுகளுக்கும் ஆங்கிலந் தவிர மற்ற மொழிகளிலுள்ள சிறந்த நூல்களைப் படித்துப் பயன் பெறுவோருக்கும் பதிப்பகத்தார் வெளியிடும் செய்திகள்.

௪. நூலகத்திற்கு வருவோர் வேண்டுகின்ற நூல்கள் :

நூலகத்திற்கு வருவோர் தாங்கள் விரும்பும் நூல்கள் ஆண்டு இல்லையாயின் அவைபற்றிய குறிப்புக்களை அதற்கென வைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர் ஏட்டில் எழுதிவைக்கலாம். நூலின் பெயர், ஆசிரியர், விலை, பதிப்பகத்தார், நூலைப்பற்றிய விமரிசனமோ அல்லது விளக்கமோ வெளிவந்த செய்தி இதழின் பெயர் முதலியன எழுதப்படல் வேண்டும்.

௫. இந்து நாளிதழின் ஞாயிறு மலர், ‘நேச்சர்’, ‘டைம்சு ஆவ் லிட்டரரி சப்ளிமெண்ட்’, மற்றைய தமிழ் ஞாயிறு இதழ், திங்கள் இதழ் போன்ற இதழ்கள் :--

இவ்விதழ்களில் புதிதாக வெளியாகும் நூல்களைப் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் தரப்படுகின்றன.

நூல் தேர்வில் துணைபுரியும் நூல்கள் (Reference Books) பின்வருமாறு :--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/22&oldid=1111755" இலிருந்து மீள்விக்கப்பட்டது