பக்கம்:நூலக ஆட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோர்தெடுக்கப்படும் நூல்கள் நமது வாழ்க்கை வளத்திற்கு வழிவகுப்பனவாயும் யாவர்க்கும் பயன்படுவனவாயும் இருத்தல் வேண்டும். ஒரு தனிப்பட்ட வரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ பழிக்கும் வகையில் எழுதப்பட்ட எந்த நூலும் நூலகத்தில் இடம் பெறுதல் கூடாது. மக்கள் உள்ளத்தினை நன்கு அறிந்து அதன்பின்னர் அவர்கள் விரும்பும் நல்ல நூல்களையே பெரும்பாலும் வாங்குதல் நூலகத்தார் கடமையாகும். எல்லா மக்களது தேவைகளையும் பூர்த்தி செய்யும் வாயில் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் ஈடுபட்டிற்கும் பல துறைகளைப் பற்றி விளக்கும் நூல்களை வாங்குதல் மக்களுக்குப் பெரிதும் பயன் அளிக்கும். வாணிகம், அரசியல், சமயம், பண்பாடு முதலிய குறித்து எழுந்த சிறந்த நூல்கள் எல்லாம் மக்கள் சிந்தனைக்குப் பெரு விருந்தாகும். மேலும் ஒரு நூலானது அதிக அளவிற்குப் பயன்படுமா அல்லது பயன்படாது போய் விடுமா என்பது குறித்து ஆராயாது நிலைத்து நிற்கும் ஆற்றல் உடைய எந்த நூலையும் வாங்குவதில் தவறொன்றுமில்லை. இறுதியாக ஒரு நூலகத்தினால் பயனடையும் மக்களது எண்ணிக்கையையும், அந்நூலகத்தின் பொருள் நிலையையும் மனத்திலே கொண்டு நூல் தேர்வு செய்தல் வேண்டும். குறைந்த விலையினையுடைய நல்ல நூல்களை வாங்கினால் ஒரு நூலகத்தில்நிறைந்த அளவில் நூல்கள் விளங்கும். குறைந்த அளவு பொருள் உள்ள ஒரு நூலகத்திற்கு அதிக விலையுள்ள நூல்களை வாங்கினால் ஒருசில நூல்களே வாங்க இயலும். இதன் காரணமாய் மக்கள் பெருமளவில் வந்து படித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/26&oldid=1111759" இலிருந்து மீள்விக்கப்பட்டது