பக்கம்:நூலக ஆட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டியல் தயாரிக்கவேண்டும். அதன் பின்னர் எல்லாக் குறிப்புக்களும் சரிவர எழுதப்பட்டிருக்கின்றனவா என்று எழுத்தாளர்கள் ஒத்திட்டுப் பார்க்க வேண்டும். சரியாக இருந்தால் அதனை நூலகக் குழுவினர் பார்வைக்கு அனுப்புதல் வேண்டும். இக்குழுவின் செயலாளராக நூலகத் தலைவரே இருத்தல் வேண்டும். பின்னர் வாங்கவேண்டிய நூலைப்பற்றிய விளக்கங்களை அட்டைகளில் குறிக்கவேண்டும். அதாவது நூலின் தலைப்பு, ஆசிரியர், விலை, பதிப்பு, பதிப்பகத்தார், பக்கங்கள் என்பதை எழுதப்படுதல் வேண்டும். இறுதியாக நூலட்டைகளை வகைப்படுத்தி, வகைப்படுத்திய குறிகளை (எண்களை) அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் எழுதுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/28&oldid=1111761" இலிருந்து மீள்விக்கப்பட்டது