பக்கம்:நூலக ஆட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் இவ்வட்டைகளை விற்பனையாளர் பெயரின் அகர வரிசைப்படி அடுக்கி வைக்கலாம்.

4. விற்பனையாளர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய நூல்களின் பட்டியலை அடையப் பெறுவர். நூலகத்தார் ஒவ்வொரு பட்டியலுக்கும் தனித் தனியே எண் கொடுத்தல் வேண்டும். இது போன்றே விற்பனையாளர்களும் அந்த எண்ணை விலைச் சீட்டில் (Invoice) குறித்து அனுப்புதல் வேண்டும். இந்த எண்கள் நூலகத்திற்கு வரும் நூல்களைச் சரிபார்ப்பதற்கும் அந்நூலுக்குரிய அட்டையினை அதனது தொகுதியினின்று அகற்றுவதற்கும் பெரிதும் உதவுகின்றன.

5. நூல்கள் விற்பனையாளரிடமிருந்து வந்ததும், வந்த நாளினை நூலட்டையில் குறித்தல் வேண்டும். ஏனெனில் அதே நூலினைப் பெறுவதற்குத் திரும்பவும் ஆணை அனுப்புவதற்குரிய நிலை ஏற்படாது.

நூலகத்திற்குத் தேவையான நூல்களை வாங்க முற்படும்பொழுது யாரிடமிருந்து அவற்றைப் பெறுதல் நலம் என ஆராய்வது நலம். நூலை வெளியிடுவோரிடமிருந்து நேர்முகமாகவோ அன்றி பெருமளவில் நூல் விற்பனை செய்யும் நிலையான நூல் விற்பனையாளரிடமிருந்தோ நூல்களை வாங்கலாம். இந்தியாவில் மேனாடுகளைப்போல நூல் விற்பனையினை ஒரு பயனுள்ள வாணிபத் துறையாகக் கருதி இதுவரை எவரும் பெருமளவில் நூல் விற்பனை செய்யவில்லை. எனவே நம் நாட்டினர் இத்துறையில் தகுந்த அளவு முன்னேறும் வரை நூல் வெளியிடுவோரிடமிருந்தோ நூலாசிரியரிடமிருந்தோ நேரடியாக நூல்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/31&oldid=1111764" இலிருந்து மீள்விக்கப்பட்டது