பக்கம்:நூலக ஆட்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெறுவது சாலச் சிறந்ததாகும். ஆயினும் நிலையான நூல் வியாளரிடமிருந்து நூல்களைப் பெறுவதிலும் நல்ல பயனுண்டு. இதைக் கருதியே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பெருவாரியான நூல் நிலையங்கள் நிலையான நூல் விற்பனையாளரிடமிருந்தே நூல்களைப் பெறுகின்றன.

நிலையான விற்பனையாளர்களை ஏற்படுத்தும் பொழுது சில கட்டு திட்டங்களை ஏற்படுத்துவது இன்றியமையாத தாகும். கீழ்க்காணும் பொறுப்புக்கள் அவ்விற்பனையாளர்களைச் சார்ந்ததாயிருக்க வேண்டும். ஒவ்வொரு நூலையும் அனுப்புவதற்கு முன்பு அந்நூல் செம்மையான நிலையில் இருக்கின்றதா எனச் சரிபார்த்தல் வேண்டும். பழுதுண்ட நாம் அனுப்பப்பட்டிருப்பின் அதனை அவர்கள் திருப்பிப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக ஓர் நூலை அவர்கள் செலவிலேயே அனுப்புதல் வேண்டும். தவிர்க்க முடியாத நிலையைத் தவிர மற்றெல்லாக் காலங்களிலும் அண்மையில் பதிப்பிக்கப்பட்ட நூலினையே அனுப்புதல் வேண்டும். குறிப்பிட்ட ஒரு நூலின் புதிய பதிப்பு முன்பே நூலகத்தில் இருக்கிறது என்று ஏதாவது ஒரு குறிப்பு காணப்படுமாயின் விற்பனைப் பண்ணையில் இருக்கும் அப்புதிய பதிப்பு நூலகத்தில் இருக்கும் பதிப்பினின்றும் வேறுபட்டதா என்று தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஒரே நூல் வேறொருதலைப்பில் மறுதடவையாக வெளியிடப்பட்டால் உடனே நூலகத்திற்கு அறிவித்து ஆணையைப் பெற்ற பின்னரே நூலினை அனுப்புதல் வேண்டும்.

பருவ வெளியீடுகளிலிருந்தோ ஒரு நூலிலிருந்தோ அரைகுறையாய் அச்சடிக்கப்பட்டு வந்தால், இதுகுறித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/32&oldid=1111765" இலிருந்து மீள்விக்கப்பட்டது