பக்கம்:நூலக ஆட்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளியிடப்படுகின்றன. ஒரு தாளில் அச்சடித்து அதை இரண்டாகவோ நான்காகவோ எட்டாகவோ மடித்துத் தைப்பார்கள். இவ்வாறு தைக்கப்பட்டுள்ள நூல்களில் முறையே 1, 5, 9, 13-ம் பக்கங்களிலும், 1, 9, 17, 25-ம் பக்கங்களிலும், 1, 17, 33, 49-ம் பக்கங்களிலும், ஒவ்வொரு பக்கத்தின் அடியில் இடப்பக்கத்து மூலையில் 1, 2, 3, 4 என்றோ , A, B, C, D என்றோ , அ, ஆ, இ, ஈ, என்றோ போடப்பட்டிருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு, வரிசையாக இருக்கிறதா என்று பார்த்து, நூல் சரியாகப் பக்கம் தவறாமல் கட்டடம் செய்யப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். இவை வரிசையாக இல்லாவிடில் அவற்றினைப் பக்கம் வாரியாகச் சரிபார்க்க வேண்டும். இவை எல்லாம் சரியாக இருக்குமானால் அந்நூல்களை நாம் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். சரியாக இல்லையெனின் அவற்றினைத் திருப்பி அனுப்புதல் வேண்டும்.

3. நூல்களைப் பதிவு செய்தல் (Accessioning)

நூல்களைச் சரி பார்த்து முடிந்த பின்னர், அவற்றினை நூலடங்கலில் (Accession Register) பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்யுங்கால் நூல்களை விலைச்சீட்டில் கண்டுள்ள வரிசைப்படி பதிவு செய்யவேண்டும். அப் பதிவு எண்களை (அதனதன் எண்ணை ) விலைச்சீட்டில் ஒவ்வொரு நூலின் எதிரிலும் குறிக்க வேண்டும். பின்னர் விலைச்சீட்டில் ‘இதில் கண்டுள்ள நூல்கள் யாவும் சரிவரப் பதிவு செய்யப்பட்டன ; விற்பனையாளருக்குரிய பணத்தை அனுப்பலாம்’ என எழுதி விலைச்சீட்டினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/43&oldid=1111776" இலிருந்து மீள்விக்கப்பட்டது