பக்கம்:நூலக ஆட்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Access System) இதன்படி நூல்கள் திறந்த அலமாரிகளில் (open shelves) அடுக்கி வைக்கப்படவேண்டும். நூலகத்திற்கு வரும் மக்கள் எவர் உதவியும் இன்றித் தாங்கள் விரும்புகின்ற நூல்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் வகையில் அலமாரிகளில் நூல்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் நூல் கிடைக்க வேண்டும்.

வெறும் செங்கற் குவியல்களோ கற்குவியல்களோ கட்டிடம் ஆகாதது போல, நூல்களை அழகாக அடுக்கி வைத்திருந்தால் மட்டும் அது நூலகம் ஆகிவிடாது. நூலகத்தினைப் பயன்படுத்திக்கொள்ள வரும் மக்களுக்கு, எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டியதில்லை என்று வழிகாட்டும் வகையில் நூல்கள் அடுக்கப்பட வேண்டும். மேலும் நூலகத்தில் எங்கெங்கு என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளுதற் பொருட்டு அட்டையினால் வழி காட்டிகள் (Guides) செய்து ஆங்காங்கு வைத்தல் வேண்டும்.

நூல்களைத் தூசு படியவிடாமல் நூலகப் பணியாளர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். நாடோறும் நூலகப் பணியாளர்கள் அலமாரிகளையும், இருக்கைகளையும், நூல்களையும் நன்கு துடைத்தல் வேண்டும். மேலும் நூல்கள் அவை அவை இருக்கவேண்டிய இடங்களில் ஒழுங்காக இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். நூலகத்திற்கு வருவோர் அலமாரிகளிலிருந்து நூல்களை எடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/48&oldid=1111781" இலிருந்து மீள்விக்கப்பட்டது