பக்கம்:நூலக ஆட்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பினர்க்குச் சீட்டுகள் (Borrower’s Tickets) வழங்கப் பெறல் வேண்டும். இச்சீட்டுக்களைக் கொடுத்துவிட்டுத் தான் நூல்களை எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு சீட்டும் எடுத்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு நூலினுக்கும் பொறுப்புடையதாகும். இனி நூல் வழங்கும் முறையினைப்பற்றிச் சிறிது விளக்கமாக வரைவாம்.

நூல் வழங்குதற்குரிய துணைப்பொருள்கள் கீழ்க் கண்ட மூன்று பிரிவுகளில் அடங்கும்.

1. ஒவ்வொரு நூலுக்கும் உரிய துணைப்பொருள்.
2. நூலக உறுப்பினர்க்குரிய துணைப்பொருள்.
3. நூல் வழங்கும் பகுதிக்குத் (Lending section) தேவையான துணைப்பொருள்.

நாள் சீட்டு (Date slip), நூலின் பெயர் முதலியன எழுதப்பெற்ற நூல் அட்டை (Book card), அவ்வட்டைக்குரிய நூல் பை (Book pocket) என்பவை நூலிற்குரிய துணைப் பொருள்களாகும்.

நாள் சீட்டு (Date slip)

நாள் சீட்டின் அளவு நீண்ட சதுரமாக இருக்க வேண்டும். அஃதாவது அதன் நீளம் 6”, அகலம் 3½," என்பதாகும். இதனை நூலின் முதல் தாளில் ஒட்ட வேண்டும். இதனை மேற்பகுதியில் சிறிது இடம் விட்டு விட்டு, அதன் நடு, கீழ்ப் பகுதிகளை இடவலமாக மூன்றாகப் பிரித்து அவற்றிலே நூலினைத் திருப்பித் தர வேண்டிய நாளைக் குறித்தல் வேண்டும். சான்றுக்காக நாள் சீட்டொன்று கீழே வரையப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/51&oldid=1111784" இலிருந்து மீள்விக்கப்பட்டது