பக்கம்:நூலக ஆட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூல் அட்டை (Book Card)


மேலே வரையப்பட்டிருப்பது நூல் அட்டையாகும். இவ்வட்டையில், வகைப்படுத்திய எண். ஆசிரியரின் பெயர், நூலின் தலைப்பு, வரிசைஎண் என்பன எழுதப்பெறல் வேண்டும். இவைகளை எழுதிய பின்னர் நூல் அட்டையினை, நூல் பையினுள் வைத்தல் வேண்டும்.

நூல் பை (Book Pocket)

நூல் அட்டையினை உள்ளடக்கி வைப்பதற்கேற்ற வகையில் பை ஒன்று செய்து, நூலின் மேலட்டையின் உட்புறத்தின் நடுவில், நாள் சீட்டின் எதிர்ப்புறத்தில் ஒட்ட வேண்டும். இப்பையினை நூல்பை என்றே வழங்குவோம். நூல் அட்டையுடன் கூடிய நூல்பை கீழே வரையப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/53&oldid=1111786" இலிருந்து மீள்விக்கப்பட்டது