பக்கம்:நூலக ஆட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூல் வழங்கும் துறைக்குரிய துணைப்பொருள்கள் பின்வருவனவாகும்.

1. உறுப்பினர்தம் சீட்டுக்களை அடுக்குதற்குரிய, குறுகி நீண்ட நாற்கோணச் சிறு மரப்

பெட்டிகள் (Trays).

2. தேதி குறிக்கும் அச்சும், அதற்குரிய மைப்பெட்டியும் (Ink pad).
3. உறுப்பினர்கள் உடைமைகளை வைத்துச் சென்றதற்குச் சான்றாக வழங்கப்படும் அடையாளச் சீட்டுக்கள்.

சீட்டுப் பெட்டிகள் (Ticket Trays)

12"x2" x 1½" அளவில் (உள் அளவு) செய்யப்பட்ட 12 சீட்டுப்பெட்டிகளாவது இருந்தால் நன்றாக இருக்கும். உறுப்பினர்ச் சீட்டுக்களை வகைப்படுத்தத் தேவைக்கேற்றவாறு முப்பிரிவுகளைக் கொண்ட பெரிய பெட்டிகள் 18" x 2" x 1½" அளவில் (உள் அளவு) இருக்க வேண்டும். உறுப்பினர்ச் சீட்டுக்களை வகைப்படுத்தி முதலில் கூறிய மரப்பெட்டிகளில் (Ticket Trays) அடுக்கி வைத்துவிட வேண்டும்.

நூல் வழங்கும் இடம் (Counter)

நூல் வழங்கும் அலுவலர் நூல் வழங்கும் இடத்தில் நடுவில் அமரவும். அவரிடத்தைச் சூழ்ந்து இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில் சிறு நடைபாதை போல ஒரு வழி அமைக்கவேண்டும் இது வரும் உறுப்பினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/57&oldid=1112335" இலிருந்து மீள்விக்கப்பட்டது