பக்கம்:நூலக ஆட்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும். பின்னர் நாள் சீட்டில் திருப்பித்தர வேண்டிய நாளைக் குறித்து நூலினை வழங்கல் வேண்டும். அங்ஙனம் அவை ஒத்திராவிடில், வரிசையில் நிற்போருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், காலம் தாழ்க்காது விரைவில் அதற்காவன செய்து நூலை வழங்குதல் வேண்டும். நூலகத்தினின்று வெளியே செல்வோர் மறதியாகவோ அன்றி வேண்டுமென்றோ எந்த நூலையும் எடுத்துச் செல்லாதவாறு கண்காணித்தல் வேண்டும்.

முறைப்படுத்தல்

ஓய்வுநேரத்தில் உறுப்பினர்ச் சீட்டுக்களுடன் இணைந்து இருக்கும் நூல் அட்டைகளை வகைப்படுத்திப் பொருள்வாரியாக அதற்கென உரிய பெட்டிகளில் முறைப்பட அடுக்கல் வேண்டும். வழக்கத்திற்கு மாறாகப் பல நாட்களுக்கு ஒரு நூலைப் பயன்படுத்த ஒருவருக்கு அனுமதியளித்தால், அந்த நூலின் அட்டையையும், அவர் சீட்டையும் ஒன்றாக இணைத்து உடனே தனியாக ஒரு பெட்டியில் தக்க தேதிக் குறிப்புடன் வைக்கவேண்டும். ஒவ்வொரு நூலினையும் வழங்கியபின்னர் அதனை அதனது பொருளின் கீழ் நூல் வழங்கும் பகுதி நாட்குறிப்பில் (Counter Diary) பதிய வேண்டும். நாளிறுதியில் இவ்வேட்டிலுள்ள எண்களும், வழங்கிய நூல் அட்டைகளின் எண்களும் ஒத்திருக்கின்றனவா எனப் பார்த்து, பிழையிருப்பின் திருத்தி மொத்தம் வழங்கப்பட்ட நூல் எண்ணிக்கையினை மேற்கூறிய ஏட்டில் (Counter Diary) பதியவேண்டும்.

நூலகம் அடைக்கும் முறை

நூலகத்தை அடைக்கும்பொழுது தேதியை மறுநாள் தேதிக்கு மாற்றிவிட்டு, புதிய புள்ளி விவரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/59&oldid=1123190" இலிருந்து மீள்விக்கப்பட்டது