பக்கம்:நூலக ஆட்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுதும் வகையில் நூல் வழங்கும் பகுதி நாட்குறிப்பில் ஆவன செய்து அதனை நூல் வழங்குபவர் (Counter Clerk) பக்கத்தில் வைத்துவிட்டு, ஏனையவற்றைத் துாய்மைப்படுத்திச் செல்லவேண்டும்.

நூல் வழங்கும் பகுதி நாட்குறிப்பில் நாடோறும் வழங்கும் நூல்களின் எண்ணிக்கையை எழுதுவதோடு நின்றுவிடாது, ஒரு வாரத்தில் வழங்கப்பட்ட நூல்களிள் மொத்த எண்ணிக்கையையும் எழுதவேண்டும். இவ்வாறே மாதம் முடிந்ததும் மாத எண்ணிக்கையையும், ஒரு ஆண்டு முடிந்ததும் ஆண்டு எண்ணிக்கையையும் குறித்தல் வேண்டும்.

வேலை ஆரம்பம்

ஏற்கனவே வழங்கப்பட்ட நூல். அதே உறுப்பினருக்கு மீண்டும் ஒரு முறை வேண்டியிருப்பின், நூல் வழங்குபவர் காலையில் வந்ததும் சீட்டினைப் பொறுக்கி எடுத்து இரவல் காலத்தினை நீட்டிக்க வேண்டும். இத்தகைய சீட்டுக்களை எளிதில் எடுத்தற் பொருட்டு, இரவல் காலம் நீட்டிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பம் வருங்கால், அச்சீட்டுடன் ஒரு வெள்ளை அட்டையினையும் இணைத்து வைத்தல் வேண்டும். வரவேற்பு உறுப்பினர்கள் நூலகத்தினுள்ளே நுழையும் பொழுது மிகவும் கண்ணியமான முறையில் அவர்களை வரவேற்று அவர் விட்டுச் செல்லும் பொருளினுக்கு ஓர் அடையாளச் சீட்டை உரியவரிடம் கொடுத்து விட்டுப் பிறிதொன்றை அவர் பொருளோடு இணைத்து ஏற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/60&oldid=1123191" இலிருந்து மீள்விக்கப்பட்டது