பக்கம்:நூலக ஆட்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பினர்ச் சீட்டுடன் இருக்கும் அந்நூலிற்குரிய நூல் அட்டையினை எடுத்து அதனுடன் சிகப்பு அட்டை ஒன்றினைச்சொருகி வைத்துவிட வேண்டும். நூல்களைத் திரும்பப்பெறும் அலுவலர், நூல்களைப் பெற்றுக்கொண்டு நூலட்டைகளை எடுக்குங்கால், இச் சிகப்பு அட்டையினை அடையாளமாகக் கொண்டு, இந்நூல் முன் கூட்டியே ஒருவரால் வேண்டப்பட்டுள்ளது' என்பதை நினைவு படுத்திக்கொள்ளலாம்.

நூலில் உள்ள நாள் சீட்டில் மீண்டும் நாளினைக் குறிக்க இடமில்லாதிருந்தால் வேறொரு புதிய நாள் சீட்டினை அந்நூலில் ஒட்ட வேண்டும். நூல் பழுது பட்டிருந்தால் அதனைச் செப்பனிடத் தனியாக எடுத்து வைக்கவேண்டும். இவ்விதக் குறைபாடுகள் ஏதுமில்லா நூல்களை மீண்டும் அலமாரிகளில் வைக்கவேண்டும்.

காலங் கடந்து வரும் நூல்

நாள் சீட்டில் குறிக்கப்பட்ட நாளிற்குப் பின்னர் கொடுக்கப்படுகின்ற நூல்களை வாங்கும்பொழுது அதற்குரிய தண்டத் தொகையைப் பெறவேண்டும். இத்தொகையை உறுப்பினர் அதற்குரிய பெட்டியிற் போட்டுவிட்டுத் தனது சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிடில் நூலக அலுவலரே தொகையைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பற்றுச்சீட்டு (ரசீது) வழங்க வேண்டும். உறுப்பினர், தொகையை அப்பொழுதே கட்ட இயலவில்லையாயின் அவர் சீட்டைத் தனியே தக்க குறிப்புக்களோடு வைத்திருந்து தண்டப்பணம் கட்டிய பின்பு சீட்டைக் கொடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/62&oldid=1123193" இலிருந்து மீள்விக்கப்பட்டது