பக்கம்:நூலக ஆட்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலின் சீட்டோடு ஒரு வெள்ளை அட்டையை இணைத்து, என்று அந்நூல் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டுமோ அன்று அந்நூலின் நாள் சீட்டில் புதிய தேதியிட்டு அன்றைய சீட்டுக்களை அடுக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். திருப்பிக் கொடுக்க வேண்டிய தேதிக்குப் பின்னர் கொண்டுவரும் நூல்களே அவற்றிற்குரிய தண்டத் தொகையைக் கட்டிய பின்னர்தான் மீண்டுமொருமுறை அதே உறுப்பினர்க்கு வழங்கலாம்.

நூலகம் மூடும் நேரம்

நூலகத்தை மூடும் வேளையில் அன்று வழங்கிய நூல்களின் நூல் சீட்டுக்களை அடுக்கி அவை எந்த நாளில் திருப்பித்தரப்பட வேண்டுமோ அத்தேதிக் குறிப்புள்ள அட்டைகளை அப்பெட்டியில் வைக்கவேண்டும்.

தண்டத் தொகை கட்டவேண்டியவர்களது சீட்டுக்களை அடுக்குங்கால் அதிகமான தண்டத்தொகை உள்ள சீட்டை முதலில் வைத்து அதிலிருந்து கீழ்நோக்கி வரிசையாக அடுக்கிவைக்கவேண்டும். தண்டத்தொகை ஏட்டில் (Fine Register) எத்துணைச் சீட்டுக்கள் இருக்கின்றன என்பதையும் குறிக்கவேண்டும்.

குறிக்கப்பட்ட நாளில் வராத நூல்களின் சீட்டுக்களை நாள் வாரியாக அடுக்கி அவற்றை உரிய ஏட்டில் பதிய வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் ஒருவர் நூலைக் கொண்டுவராவிடில், அவருக்கு நினைவுக் குறிப்பு அனுப்புதல்வேண்டும். இதற்கு அவரிடமிருந்து மறுமொழி வராவிடில், உரிய தண்டத் தொகையுடன் நூலினைத் திரும்பத் தருமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/64&oldid=1123195" இலிருந்து மீள்விக்கப்பட்டது