பக்கம்:நூலக ஆட்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. நூலக விதிகள்


வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் இருந்தால் தான் நூலகத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் எதிர்பார்க்க முடியும். எனவே நூலகத்திற்கு வரும் ஒவ்வொரு வரிடமும் நூலக விதிகளையும், ஒழுங்கினையும் எடுத்துச் சொல்ல வேண்டும். பெரிய நூலகங்களில் நூலக விதிகள் அச்சடிக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்பினர்க்கும் ஒவ்வொரு படி (Copy) வழங்கப்படுகின்றது. மேலும் நூலக விதிகளடங்கிய அச்சுப்படியினை அறிக்கைப்பலகையிலும் ஒட்டலாம்.

நூலக விதிகள் கீழ்க்கண்டவைகளைத் தழுவி அமைக்கப்படவேண்டும்.

1. நூலகத்தின் நூல் தொகுதி பற்றிய சிறு குறிப்பு.
2. வகைப்படுத்தும் முறை பற்றிய விளக்கம்.
3. நூலக வேலை நேரம்.
4. விடுமுறை நாட்கள்.
5. நூலக ஒழுங்குகள்.
6. அரிய நூல்களுக்கு அனுமதிக்கப்படவேண்டிய காலம் (Period of loan).
7. புகைபிடித்தல், உறுப்பினர்கள் தங்கள் பொருள்களே நூலகத்தினுள்ளே கொண்டு வருதல் முதலியவை பற்றிய விதிகள்.

நூலகத்தின் தன்மையைப் பொறுத்தே நூலக விதிகள் அமைக்கப்பட வேண்டும். சான்றுக்காக பொது நூலக விதிகள் கீழே கோவைப் படுத்தப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/67&oldid=1123198" இலிருந்து மீள்விக்கப்பட்டது