பக்கம்:நூலக ஆட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. நூலகத்தினுள் அமைதி நிலவ வேண்டும். புகைத்தலும், எச்சில் உமிழ்தலும், உண்பதும், உறங்குவதும் கூடாது.

7. நாய்கள் முதலிய வளர்ப்பு உயிரினங்கள் நுழைய விடப்பட மாட்டா.

8. நூலகத்திலிருந்து முறையற்ற வழியில் நூல்களை எடுத்துச் செல்வதோ ஏனைய பொருட்களைக் கடத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.

9. நூலகத்திற்கு வருகின்றவர்கள் தங்களுடன் கொண்டு வரும் குடை , நூல், பை போன்றவற்றை வெளியிலே வைத்துவிடவேண்டும்.

10. நூலகத்திற்கு நூல் வாங்குவது குறித்துத் தம் கருத்துக்களைச் சொல்ல விரும்புகின்றவர்கள் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் ஒரு ‘கருத்து ஏட்டில்' (Suggestion Register) தாங்கள் விரும்பும் நூலின் பெயரினை, ஆசிரியர், நூலின் விலை முதலிய விளக்கங்களுடன் எழுதி வைக்கலாம்.

11. நூலக ஊழியர்கள் அவர்களுடைய கடமையிலிருந்து வழுவினால் அவற்றை நூலகத் தலைவரிடம் உடனே அறிவிக்கவேண்டும். மேலும் நூலக ஊழியர்கள் எந்த விதமான அன்பளிப்பையும் பெறக்கூடாது.

ஆ. ஆராய்ச்சியகம்-படிப்பகம்

12. நூலக ஆராய்ச்சியகம் வேலை நாட்களில் ஏழு மணியிலிருந்து பதினொரு மணி வரையிலும், மாலை நாலு மணியிலிருந்து எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/69&oldid=1123200" இலிருந்து மீள்விக்கப்பட்டது