பக்கம்:நூலக ஆட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

of Schools) தரத்திற்குக் கீழ்ப்ப டாத அரசாங்க அலுவலர்.

(கா) ஒருகௌரவ நீதிபதி (Hon'rary Magistrate).

(கி) நகரவைக்கழக உறுப்பினர் அல்லது மாவட்டக் கழக உறுப்பினர் அல்லது சிற்றூரைவைத் தலைவர் அல்லது உறுப்பினர்.

(கீ) ஓர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரித் தலைவர் அல்லது பேராசிரியர்.

(கு) மாநில அல்லது மத்தியச் சட்ட மன்ற உறுப்பினர்.

17. நூலெடுக்க விரும்புவோர் அதற்கென உள்ள விண்ணப்பத்தில் எழுதித்தர வேண்டும்.

18. நூல்களை இல்லத்திற்கு எடுத்துச் செல்ல உரிமை பெற்றவருக்கு பொறுப்புப் பணத்திற்குத் தக்கவாறு உறுப்பினர்ச் சீட்டுக்கள் (Borrower's Tickets) வழங்கப்படும். இச்சீட்டுக்களைக் கொடுத்து இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நூல்களுக்கு, இச்சீட்டுக்களை நூலகத்திலிருந்து திரும்பப் பெறும் வரையிலும் நூல் எடுத்தவரே பொறுப்பாளியாவர்.

19. பொறுப்புப் பணத்தைத் திரும்ப வாங்க எண்ணுவோர் ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவித்தல் வேண்டும். நூல்களோ, சீட்டுக்களோ திருப்பித் தரப்படாமலிருப்பின் இப்பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/71&oldid=1123202" இலிருந்து மீள்விக்கப்பட்டது