பக்கம்:நூலக ஆட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. நூல் பட்டியல் தொகை நாட்குறிப்பு (cataloguing Diary)

இதில் நூல் பட்டியல் தொகை எழுதப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையினைக் குறிக்க வேண்டும்.

4. நூல் வழங்கும் பகுதி நாட்குறிப்பு (Counter Diary)

முன்னர்க் கூறப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களில் 4, 5, 6, 7 பிரிவுகளைச் சார்ந்த புள்ளி விவரங்கள் இந்நாட் குறிப்பில் குறிக்கப்பெறுதல் வேண்டும்.

அடுத்து நூலக ஆண்டறிக்கை எவ்வாறு தயாரிக்கப் பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுதற் பொருட்டு, சான்றுக்காக ஆண்டறிக்கையொன்று அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/76&oldid=1127234" இலிருந்து மீள்விக்கப்பட்டது