பக்கம்:நூலக ஆட்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. கணக்கு ஏடுகளும் கணக்கெடுப்பும்

நூலக ஆட்சிக்கணக்கு ஏடுகள்

(Library Administrative Records)

1. விலைச் சீட்டுக்கள் (Invoices)

விலைச்சீட்டுக்கள் இன்றியமையாத ஆட்சிக் குறிப்புக்கள் ஆகும். விலைக்கு வாங்கப்பட்டவை பற்றிய விளக்கமளிக்கும் முதன்மையான குறிப்புக்கள் விலைச்சீட்டுக் களாதலால் அவைகளை மிகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இந்த விலைச் சீட்டுக்களில் நூலைப் பற்றிய எல்லாவித விளக்கங்களும் காணப்படும். விற்பனையாளர்கள் விலைச் சீட்டினை அனுப்புங்கால் மூன்று படிகள் Copies) அனுப்புதல் சாலச் சிறந்ததாகும். மூன்றினுள் இரண்டு அலுவலகத்திற்குப் பயன்படுத்தப்படும். மற்றொன்று தற்காலம் மட்டும் பயன்படுத்தப்படும். சில நூலகங்களில் விலைச் சீட்டில் காணப்படும் விளக்கங்களை ‘விலைச்சீட்டு ஏட்டில்’ (Invoice Book or Bill Register) பதிந்து கொள்வர். இவ்வேட்டிற்குப்பதில் அட்டைகளையும் சில நூலகங்களில் பயன்படுத்துவர். ஏட்டில் விளக்கங்களைக் குறித்துக்கொள்ளுதல் போலவே, ஒவ்வொரு நூலிற்குமுரிய விளக்கங்களைத் தனியாக அட்டைகளில் குறித்துக்கொண்டு அடுக்கிவைத்து விடுவர். விலைச் சீட்டுக்களைக் காக்கும் வழிகளிற் சிறந்த வழி, சீட்டுக்களை விற்பனையாளர் பெயர் அகர வரிசைப்படி அடுக்கி, அதற்குரிய அடுக்கில் வைத்தலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/84&oldid=1123210" இலிருந்து மீள்விக்கப்பட்டது