பக்கம்:நூலக ஆட்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. நன்கொடைக் குறிப்பேடு (Donation Register)

எல்லா நன்கொடைகளும் நன்கு தேர்ந்து தேர்ந்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவைகள் உரிய ஏட்டில் பதியப்படல் வேண்டும். ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு நன்கொடைக் குறிப்பேடு வைத்துக்கொள்ளல் வேண்டும். நன்கொடைகள் வருகையில், வந்த நாள், கொடுத்தவரின் பெயர், முகவரி, நன்கொடை பற்றிய விளக்கங்கள் என்பன வழக்கமாகக் குறிக்கப்பெறுதல் வேண்டும். இவற்றோடு நூலகக் குழுவிற்கு நன்கொடை பற்றி அறிவிக்கப்பட்டது, குழு அதனை ஏற்றுக்கொண்டது என்பனவும் பதியப்படல் வேண்டும்.

3. நூலடங்கல் (Accession Register)

நூலகக் கணக்கு ஏடுகளில் நூலடங்கல் என்பது தலைமை வாய்ந்ததும், இன்றியமையாததுமாகும். நூலகத்திற்கு வாங்கப்படும் ஒவ்வொரு நூலைப்பற்றிய வரலாறு முழுமையும் எடுத்துக் கூறும் ஏடு இது ஒன்றுதான். இவ்வேடு பல்வேறு வகையாக விளங்கும். ஒரு நூலகத்தில் பெரியதோர் ஏடாக (Ledger Form) இருக்கும். மற்றொன்றில் அட்டைகளாலானதாக - விளங்கும். வேறொன்றில் தாள்களாக இருக்கும். எனினும் மிகப் பெரியதோர் ஏடாக இருப்பதே பலவிதத்திலும் நன்மை பயக்கும். சான்றுக்காக இத்தகைய நூலடங்கலின் பக்கம் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/85&oldid=1123211" இலிருந்து மீள்விக்கப்பட்டது