பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102
நெஞ்சக்கனல்
 


அதற்குப்பின் இரண்டுமாதகாலம் ஊழியர் கூட்டம் என்ற பேச்சே கிடையாது. மூன்றாவது மாதம் பொதுத்தேர்தல் வந்துவிட்டது. கட்சி கமலக்கண்ணனை அபேட்சகராக நிறுத்தும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தியும் பரவத் தொடங்கிவிட்டது அந்த வேளையில். தான் மறுபடியும் எதிர்ப்பு உருவாயிற்று.

‘தேசியப் போராட்டக் காலத்தில் வெள்ளைக்கார னுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும், கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தீவிரத் தகுதிகளான சுதேசித் துணி உடுத்துதல், மதுவிலக்குக் கொள்கையை மேற்கொள்ளுதல், போன்றவற்றைக் கடைப்பிடிக்காதவரு மான கமலக்கண்ணன் கட்சி அபேட்சகராக நிறுத்தப் பட்டால்–உடனே கட்சியிலிருந்து விலகுவோம்’—என்று கையொப்பமிட்ட பல கடிதங்கள் தலைவரிடம் குவிந்தன்.

‘ஒருவன் தான் படுகிற சிரமங்களினால் தியாகியாகலாம். ஆனால் தன்னைத் தியாகியாகத் தயாரித்துக் கொள்ள முடியாது’—என்பது மீண்டும் கமலக்கண்ணனுக்கு நிரூபிக்கப்பட்டது. ஆனாலும் பெரிய மனிதரும் பெரும் பணக்காரருமான கமலக்கண்ணனைக் கட்சி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எல்லாத் தொகுதிகளுக்கும் கட்சியின் அபேட்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் பெயர்களும் பத்திரிகைகளில்வந்துவிட்டன. கமலக்கண்ணன் நிற்கவேண்டிய தொகுதிமட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கமலக்கண்ணனையே நிறுத்திவிடுகிற துணிவு கட்சிக்கு இல்லை. ஆனால், ‘சுயேச்சையாகக் கமலக்கண்ணன் நின்றால் அவரை எதிர்த்துக் கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்துவதில்லை’ என்றுமுடிவாயிற்று. இந்த ஏற்பாட்டைக் கமலக்கண்ணனும் ஏற்கவேண்டியதாயிற்று. இதற்கே கட்சியில் பலத்த எதிர்ப்பு இருந்தும் பெரிய பெரிய தலைவர்கள் கமலக்கண்ணனுக்காக முன் நின்று இதைச் செய்தார்கள்.

சுயேச்சையாக நின்றால் எதைச் சின்னமாகக் கொள்வது என்றுமுடிவுசெய்வதற்காக அபேட்சைமனுக் கொடுப்